தாம்பரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜாவை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த எஸ்.பி. பகவன்தாஸ் ரெட்டியார் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஆ. ஜானகிராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான அன்பழகன் பேசியதாவது:
தாம்பரம் தொகுதி படுவேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல¢ மேம்பாலங்கள், சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் ராஜா, பத்து ஆண்டுகளாக தாம்பரம் நகராட்சி தலைவராக இருந்தார். அப்போது குடிநீர், சாலை வசதி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து, பல திட்டங்களை தாம்பரம் தொகுதிக்கு கொண்டு வந்துள்ளார். உள்ளாட்சி பொறுப்பில் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் இருந்ததன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக நடந்துள்ளன.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் முதல்வர் கருணாநிதி அலை வீசுகிறது. காரணம், கடந்த 5 ஆண்டு கால நலத்திட்டங்கள். முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே வழிகட்டி. இந்தியா நெருக்கடி நிலையில் இருந்தபோது அந்த நிலையை மாற்றியதில் முக்கிய பங்கு கருணாநிதிக்கு உண்டு.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினோம். தற்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். வெளியிலிருந்து வந்தவர்களை நம்ப வேண்டாம். இங்கு உள்ளவர்களை நம்புங்கள்.
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆதிமாறன் நன்றி கூறினார்.
முன்னதாக தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள தொகுதி வேட்பாளர் அலுவலகத்தை அன்பழகன் திறந்து வைத்தார்.
முன்னதாக தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள தொகுதி வேட்பாளர் அலுவலகத்தை அன்பழகன் திறந்து வைத்தார்.
No comments:
Post a Comment