கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

கேரளாவில் காங். கூட்டணிக்கு தி.மு.க. ஆதரவு


கேரளாவில் சட்டப்பேரைவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்று கேரள மாநில தி.மு.க. செயலாளர் குமாரி எஸ்.நாயர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பா.ஜ. எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இடது முன்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி., காங்கிரஸ் (எஸ்) உள்ளிட்ட கட்சிகளும், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்) உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு கேரள மாநில தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க. கேரள மாநில செயலாளர் குமாரி எஸ்.நாயர் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தி.மு.க. ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தொண்டர்கள் கங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபவார்கள்.

இவ்வாறு நாயர் கூறினார்.

No comments:

Post a Comment