திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, ஆசிய சர்வதேச ஊழியர்கள் ஐக்கியம், ஆசிய சுயாதீன் திருச்சபைகளின் மாமன்றம் மற்றும் அகில இந்திய கிறிஸ்தவர்கள் விடுதலை முன்னணியினர், முதல்வர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் 26.03.2011 அன்று சந்தித்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து ள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து ள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக் குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா தலைமை தாங்கினார். நிறுவனர் ஜைனுல் ஆபிதீன், பொதுச்செயலாளர் ரஹ்மத் துல்லாஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஜைனுல் ஆபிதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக 7 முஸ்லிம் வேட்பாளர்க ளை நிறுத்தியிருக்கிறது. ஆனால், திமுக அணி 10 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. மேலும், இடஒதுக் கீட்டை அதிகரித்து தரு வதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த சட்டப் பேரவை தேர்தலில் நாங்கள் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு ஜை னுல் ஆபிதீன் கூறினார்.
பின்னர், 26.03.2011 அன்று இரவு அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதியை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
ஆதரவு குவிகிறது
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு, பல்வேறு கட்சிகள், சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பழங்குடி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குறிஞ்சி கேசவபாண்டி வெளியிட்ட அறிக்கையில், “பழங்குடி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், திருவண்ணாமலையில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்றும், திமுக வேட்பாளர்களுக்கும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கடினமாக உழைப்பது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.முனுசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கத்தின் 50வது பொன்விழா மாநாட்டில் போடப்பட்ட 10 தீர்மானங்களில் 9 தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி, சமூக மக்கள் பயன்பெறும் வகையில் கருணாநிதி நல்லாட்சி நடத்தி வருகிறார். எனவே, தொடர்ந்து அவரது ஆட்சி தமிழகத்தில் நடைபெற திமுக கூட்டணிக்கு எங்கள் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
காட்டுநாய்க்கன் வேட்டைக்கார பழங்குடியினர் நல முன்னேற்றச் சங்க தலைவர் ஆர்.கே.மதுரை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தேர்தல் அறிக்கையில் பழங்குடி இன மக்களுக்காக தனி நலவாரியம் அமைத்து மேம்படுத்தவும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வாழ்வாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழகத்தில் உள்ள சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட காட்டு நாய்க்கன் வேட்டைக்கார பழங்குடியினர் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment