கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

வில்லிவாக்கம் தொகுதியில் நிதியமைச்சர் அன்பழகன் வேட்பு மனு தாக்கல்



வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிதியமைச்சர் க.அன்பழகன் 19.03.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள சிப்காட் அலுவலகத்துக்கு 19.03.2011 அன்று மதியம் 12.50 மணிக்கு அன்பழகன் வந்தார். வேட்பு மனு விண்ணப்பத்தை வில்லிவாக்கம் தொகுதி தேர்தல் அதிகாரி சம்பத் குமாரிடம் கொடுத்தார்.
பிறகு அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
வில்லிவாக்கம் தொகுதியில் எப்போதுமே திமுகவுக்கு அதிக ஆதரவு உண்டு என்றாலும் கூட்டணி கட்சிகள், அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருடைய ஆதரவும் இருப்பதால் நிச்சயம் வெற்றி பெற முடியும். ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்யும் பணி இன்னும் 3 நாட்களில் தொடங்கும். வேட்புமனு மாநில மொழியில் இருந்தால் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.
வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் வி.எஸ்.பாபு, வில்லிவாக்கம் பகுதி செயலாளர் சதீஷ் குமார், அன்பழகனின் பேரன் வெற்றி அழகன், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

அமைச்சர் அன்பழகனின் சொத்து விவரம்


தி.மு.க. சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் க.அன்பழகன் 19.03.2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுவோடு தனது சொத்து விவரங்களையும் அவர் தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) சென்னை கீழ்ப்பாக்கம் கிளையில் நிரந்தர டெபாசிட் மற்றும் வரி சேமிப்பு முதலீடு ஆகிய இனங்களில் மொத்தம் ரூ.28 லட்சத்து 55 ஆயிரத்து 232 முதலீடு. யு.டி.ஐ. மிïட்சுவல் நிதி, எச்.டி.எப்.சி. மிïட்சுவல் நிதி, சுந்தரம் பி.என்.பி. பரிபாஸ் மிïட்சுவல் நிதி ஆகியவற்றில் மொத்தம் ரூ.2 லட்சம் முதலீடு.

தேசிய சேமிப்பு பத்திரங்களில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு. ஐ.ஓ.பி. கீழ்ப்பாக்கம் கிளையில் சேமிப்பு கணக்கு, நிரந்தர டெபாசிட் மற்றும் என்.எஸ்.சி., எஸ்.சி.எஸ்.எஸ். முதலீடு ஆகியவை மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் ராயல்டி மூலமாக கிடைக்கும் தொகை ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 590.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தனக்கு எவ்விதமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இல்லை என்று வேட்புமனுவின் பிரமாண பத்திரத்தில் அமைச்சர் க.அன்பழகன் குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் தனது பெயரில் ரூ.6 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.1,500-ம் இருப்பதாக அந்த பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் :
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி துணைக் கமிஷனருமான ஜெயராமனிடம் 19.03.2011 அன்று காலை 11.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக மாநகர திமுக துணை செயலாளரும், தெற்கு மண்டல தலைவருமான பைந்தமிழ்பாரி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளருடன் திமுக சார்பில், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மு.ராமநாதன், மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து மற்றும் காங்கிரஸ் சார்பில் மாநகர செயலாளர் சின்னையன், இருகூர் சுப்பிரமணியம், கொமுக சார்பில் மாநகர தலைமை அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் சுசி.கலையரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகமதுபஷீர், ரகமத்துல்லா ஆகியோர் உடன் சென்றனர்.
மனுத்தாக்கல் செய்த அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறுகையில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி உத்தரவுக்கு இணங்க வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்றார்.


No comments:

Post a Comment