கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

கொ.மு.க வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு


சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, சென்னையில் 19.03.2011 அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 6 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, 1. சூலூர் - ஈ.ஆர்.ஈஸ்வரன்,
2. பல்லடம் - கே.பாலசுப்பிரமணியன்,
3. பொள்ளாச்சி - கே.நித்யானந்தன்,
4. உடுமலைப்பேட்டை - டி.இளம்பருதி,
5. பெருந்துறை - கே.கே.சி.பாலு,
6. கோபிசெட்டிப்பாளையம் - என்.எஸ்.சிவராஜ்
ஆகியோர் போட்டியிடுவார்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இன்ஜினியரிங் பட்டதாரிகள். நாமக்கல் தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. எனவே, நாளை (20.03.2011 அன்று ) அந்த தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
இந்த 7 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறினார்.

No comments:

Post a Comment