“திமுக அரசு செயல்படுத்திய ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா” என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா, வேப்பேரி பெரியார் திடலில் 27.03.2011 அன்று நடந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் தலைமை வகித்தார். தலைவர் மணிமாறன் வரவேற்றார். முதல் பிரதியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா.இளவரசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த விழா நடக்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கே திரண்டிருப்பது, எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பெண்கள் அதிக அளவில் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இங்கு திரண்டிருக்கும் தாய்மார்களை பார்க்கிறேன்.
1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் நிறைவேற்றினர். அதை, 60 ஆண்டுகளுக்கு பிறகு 1989ல் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வைத்தார். திமுக ஆட்சியில்தான் அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
ஏழை பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தை 1989ல் கருணாநிதி தொடங்கினார். அப்போது க்ஷீ 5 ஆயிரம் வழங்கப்பட்டது. 1991ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா, இந்த திட்டத்தை நிறுத்தினார். 96ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, திருமண உதவியை
க்ஷீ 5 ஆயிரத்தில் இருந்து க்ஷீ 10 ஆயிரமாக உயர்த்தினார். பின்னர், 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போதும் அந்த திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார்.
2006ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் க்ஷீ 10 ஆயிரமாக வழங்கப்பட்ட திருமண உதவி தொகையை க்ஷீ 15 ஆயிரமாக கருணாநிதி உயர்த்தி வழங்கினார். பின்னர், 6 மாதத்தில் அந்த நிதி க்ஷீ 20 ஆயிரமாகவும், அடுத்த 6 மாதத்தில் க்ஷீ 25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் திருமண உதவித் தொகையை க்ஷீ30 ஆயிரமாக உயர்த்துவதாக கருணாநிதி அறிவித்துள் ளார்.
மகளிர் சுயஉதவிக் குழுவை 1989ல் தர்மபுரியில் கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் இப்போது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டிலேயே மகளிர் சுயஉதவிக் குழு வளர்ச்சியிலும், எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் நமது முதல்வர் கருணாநிதி. இதை எல்லாம் உணர்ந்து தாய்மார்களும், பெண்களும் கடமையாற்ற வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment