கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

கடைசி ஏழை இருக்கும் வரை இலவச திட்டங்கள் தொடரும் - முதல்வர் கருணாநிதி‘கடைசியாக ஒரு ஏழை தமிழகத்தில் இருக்கும் வரை ஏழைகளுக்கான இலவச திட்டங்களை தொடர வேண்டும். அதற்காக என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தினாலும், ஏழைகளுக்காக நான் செய்யும் காரியங்களை நிறுத்த மாட்டேன்’ என்று முதல்வர் கருணாநிதி உருக்கமாக கூறியுள்ளார்.
திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பிரசார பொதுக்கூட்டம் தஞ்சையில் 24.03.2011 அன்று இரவு நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இந்த இயக்கம் ஜனநாயகத்தின் அடிப்படையில் துவங்கிய இயக்கம். அதனை வளர்க்க பாடுபடும் அறப்போர் இயக்கம். அவசர சட்டம் தமிழகத்தின் மீது பாய்ந்தபோது, நெருக்கடி நிலை ஏற்பட்டபோது, யாரையும் இடித்துரைக்காமல், தமிழகத்தையும், தாயகத்தையும் காப்பாற்றிய பெருமை திமுகவுக்கு உண்டு.
சொன்னதை செய்வோம் என்று எங்களது தேர்தல் அறிக்கையில் இன்றல்ல. கடந்த காலத்திலேயே சொல்லி உள்ளோம். அந்த தேர்தல் அறிக்கைதான் தேர்தலின் கதாநாயகன். இப்போதுள்ள தேர்தல் அறிக்கையை பற்றி நிருபர்கள் கேட்டபோது, அது கதாநாயகன் என்றால் இது காதாநாயகி என்றேன். வில்லன் வருவார்கள். போவார்கள். எந்த படத்திலும் நாடகத்திலும் வில்லன் வீழ்வது தான் நியதி. எனவே இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள எல்லா அறிவிப்புகளும் தமிழகத்தின் தாய்மார்களுக்காக சொல்லப்பட்டவை.
கடந்த காலத்தில் எல்லோருக்கும் டிவி தரப்படும் என்றோம். அதை நம்ப வேண்டாம் என சொன்னவர்கள் உண்டு. அது இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் லட்சக்கணக்கில் டிவி கொடுத்தோம். இன்னும் கொடுப்பதற்கு அடையாள டோக்கன் கொடுத்துள்ளோம். யார் வந்தாலும் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் போட்டியிட வரவில்லை. எனக்கு போட்டி பிடிக்காது. முடியவும் முடியாது. இயலாத வாக்குறுதிகளை அளிப்பது, மணலை கயிறாக திரிப்போம் என சொல்லத் தெரியாது. ஏனென்றால் அப்படி யாரும் செய்ய முடியாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் எல்லாம் என்னை வாழ்த்தி, சென்னையில் பெரிய மண்டபத்தில் பதவி பிரமாணம் செய்தபோது, முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்கு தருவேன் என்று சொல்லியிருந்தேன்.
அதை படித்து காட்டி கையெழுத்து போட்டு பத்திரிக்கைகளுக்கு கொடுத்தேன். 10 நாள் கழித்து கணக்கு பார்த்தபோது இன்னமும் குறைவாக தரலாம் என கண்டறிந்து ஒரு ரூபாய்க்கு வழங்கினேன். அது என் இஷ்டம். நான் எதையும் செய்வேன். ஏன் என்றால் அது எனக்காக அல்ல. நாட்டு மக்களுக்காக. அதனால் தான் ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி என்று மாற்றி ஏழையிலும் ஏழைகளுக்கு இந்த தேர்தல் அறிக்கையில் வேதனையை குறைக்க, ஏற்கனவே அறிக்கையிலிருந்து மாறுபட்டு இந்த தேர்தல் அறிக்கையில் 35 கிலோ அரிசி பரம ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தேன்.
இவை யாரையும் ஏமாற்ற அல்ல. நடக்க கூடியவை. நாளைக்கு செய்ய கூடியவை. இல்லையென்றால் என் காதை பிடித்து, துண்டைப் பிடித்து கேட்க மாட்டீர்களா? அதனால் ஏழைக்காக இந்த அரசு இருக்கிறது. தமிழகத்தில் கடைசி ஏழை இருக்கும் வரை இந்த திட்டம் நீடிக்கும் என்றேன். இன்றும் சொல்கிறேன். கடைசியாக ஒரு ஏழை தமிழகத்தில் இருக்கும் வரை ஏழைகளுக்கான இலவச திட்டங்களை தொடர வேண்டும். அதற்காக என்னை எங்கே கொண்டு போய் நிறுத்தினாலும், ஏழைகளுக்காக நான் செய்யும் காரியங்களை நிறுத்த மாட்டேன் என சொல்லுவேன். நீங்கள் என்னை பதவியில் உட்கார வைப்பதற்கான காரணம் என்னை வாழவைக்க அல்ல. நீங்கள் வாழ்வதற்காக.
தமிழர்களுக்காக என் உடலில் உயிர் உள்ளவரை உழைப்பேன் என்பது தான் தேர்தல் அறிக்கையின் முகப்பு. ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கென என் உயிரை தருவேன். என் வாழ்வையே தருவேன். எங்களை குறைசொல்லி, எங்களை திட்டிப் பேசுபவர்கள் யார், வசைபாடுபவர்கள் யார் என்பதற்கெல்லாம் ஒரே பதில். என்னை வளர்த்த அண்ணா சொன்னார் ‘தம்பி வாழ்க வசவாளர்கள் என்றார். அவர்களுக்கான போட்டி வார்த்தைகளை தயாரித்து பேச வேண்டியதில்லை. எதுவாக இருந்தாலும் நீ சொல்ல வேண்டிய ஒரே பதில் வாழ்க வசவாளர்கள் என்பது தான்.
தமிழன் வீழ்ந்தது போல தெரியலாம். ஆனால் தமிழ் சமுதாயம் வீழ்ந்து வீழ்ந்து எழுந்த சமுதாயம். அதை யாரும் வீழ்த்தி விட முடியாது. அந்த கடலில் இன்னும் பல எழுச்சிகள் ஏற்பட்டே தீரும். கூட்டணி கட்சியினர் ஒன்று சேர்ந்து உழைத்தால் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு.
மக்களை வாழ வைக்கத்தான் துவங்கப்படுகிறது. மக்கள் வாழ முடியாமல் போனால் அது கட்சியின் குற்றம்.
கட்சியின் ஒற்றுமையின்மை தான் காரணமாக இருக்க முடியும். ஜ.மு.க கட்சிகளும் லட்சியத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளோம். அதற்காகவே உங்கள் வாக்குகளை கேட்கிறோம்.
தமிழகத்தில் மீண்டும் ஆள உங்கள் உத்தரவை கேட்கிறோம். நீங்கள் காலால் இடும் கட்டளையை, நாங்கள் தலையால் செய்து முடிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஊழியர்களை சிறையில் தள்ளியவர் ஜெயலலிதா: டி.ஆர்.பாலு

ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை சிறையில் தள்ளியவர் ஜெயலலிதா என, டி.ஆர்.பாலு பேசினார்.

தஞ்சையில் திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,

ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை சிறையில் தள்ளியவர் ஜெயலலிதா. வேலைவாய்ப்பை பறித்தவர். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த இருண்ட காலத்தில் வேலைவாய்ப்பை பறித்தவர். சாலை பணியாளர்களை சிறையில் தள்ளியவர். அப்படி இழந்த வேலைவாயப்புகளை மீண்டும் தந்தவர் கலைஞர்.

கலைஞர் மிக்ஸி அல்லது கிரைண்டர் என்று சொல்லியிருக்கிறார். ஏன் பிரிட்ஜ் கொடுத்தால் மக்களாகிய நீங்கள் வாங்கமாட்டீர்களா? நம்பிக்கைக்கு உரியவர் கலைஞர். சொன்னதைக் காட்டிலும் கூடுதலாக செய்யக்கூடியவர். ஆகவே நம்பிக்கைக்கு உரிய தலைவருக்கு வாக்கு அளிக்க போகிறீர்களா? நம்பகமில்லா ஒருவருக்கு வாக்கு அளிக்க போகிறீர்களா? இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்க்கு, சட்டமன்றத்திற்கு வராத ஜெயலலிதாவுக்கு 64 கமாண்டோ பாதுகாப்பு. கலைஞருக்கு எந்த கமாண்டோவும் தேவையில்லை. உங்களுக்கு நாங்கள் தான் கமாண்டோக்கள் என்றார்.


No comments:

Post a Comment