சென்னையில் இருந்து மதுரைக்கு திரும்பிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 18.03.2011 அன்று மதுரையில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அழைத்து தேர்தல் வியூகம் குறித்து அலோசனை வழங்கினார்.
19.03.2011 அன்று புறநகரில் உள்ள 6 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை வழங்கினார். தேர்தல் திட்ட பணிகளை விளக்கிக் கூறி, ஒவ்வொரு வேட்பாளரையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி வலுபெற நீங்கள்தான் காரணம் என்று கூறுகிறார்களே?
பதில்: நான் மட்டும் காரணம் அல்ல. திமுக - காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அனைவரின் முயற்சியால் கூட்டணி வலுபெற்றது.
கேள்வி: பிரச்சாரத்தை துவங்கிவிட்டீர்களா? பதில்: நேற்றே துவங்கிவிட்டேன். கேள்வி: எதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வீர்கள்? பதில்: கலைஞர் அரசின் சாதனைகள் மற்றம் திட்டங்கள் கேள்வி: எதிரணியில் குழப்பம் நீடிக்கிறதே? பதில்: அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றார். முன்னதாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்களும் வேட்பாளர்களுமான மூர்த்தி (மதுரை கிழக்கு) தளபதி (மதுரை மேற்கு) வேட்பாளர்கள் எஸ்.ஓ.ராமசாமி (உசிலம்பட்டி), மு.மணிமாறன் (திருமங்கலம்), ஆர்.ராணி (மேலூர்) பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியன் (சோழவந்தான்) ஆகியோர் மு.க.அழகிரியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment