கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 20, 2011

ஐந்தாண்டு ஆட்சியில் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றம்


கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 19.03.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் புளோரைடு உப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமான குடிநீர் வழங்குவதற்காக ஒகேனக்கல் குடிநீர் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் தமிழ்நாடு அரசால் 1,928.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 2012ல் முடிக்கப்படும். 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 6,755 ஊரக குடியிருப்புகளிலுள்ள 30 லட்சம் மக்கள் பயன் பெறுவர்.
சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 295 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் 315 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், 3.08 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒன்றியங்களிலுள்ள 755 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு
ஸீ234
கோடி மதிப்பீட்டில் 5.43 லட்சம் மக்கள் பயன்பெறும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, நரிக்குடி மற்றும் விருதுநகர் ஒன்றியங்களிலுள்ள 637 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பல்லம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 965 குடியிருப்புகளுக்கான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், மேலூர், அவனியாபுரம், திருமங்கலம் நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, விளாங்குடி, பரவை, திருநகர், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 1,430 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம்
ஸீ1,295
கோடி மதிப்பீட்டில் 18.68 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் 25.1.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் வாரியம், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னோடியாகத் திகழ்கிறது. 2006க்கு பின்
ஸீ1,734.68
கோடி மதிப்பீட்டிலான 201 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களின் மூலம் 16 நகராட்சிகள், 87 பேரூராட்சிகள், 13,469 ஊரகக் குடியிருப்புகளில் வாழும் 89.35 லட்சம் மக்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஸீ23.04
கோடியில் 92,553 மக்கள் பயன்பெறும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, கே.சி.பாளையம், சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு, சென்னிமலை, பெருந்துறை ஒன்றியங்களைச் சேர்ந்த 69 குடியிருப்புகள் ஆகியவற்றுக்கான கூட்டுக்குடிநீர்த் திட்டம், 13.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,23,082 மக்கள் பயன்பெறும் வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரக்கோணம், திருத்தணி நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் 134 நகரக் குடிநீர்த் திட்டங்கள் 201.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஸீ32.61
கோடி மதிப்பீட்டில் 1,37,933 மக்கள் பயன்பெறும் தாம்பரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம்,
ஸீ7.90
கோடி மதிப்பீட்டில் 82,689 மக்கள் பயன்பெறும் திருச்சி மாநகராட்சியிலுள்ள திருவரங்கம் குடிநீர் அபிவிருத்தி திட்டம்,
ஸீ6.48
கோடி மதிப்பீட்டில் 60,876 மக்கள் பயன்பெறும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம்,
ஸீ4.89
கோடி மதிப்பீட்டில் 72,168 பயன்பெறும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஆகிய நகர்ப்புற குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 6 கட்டங்களாக
ஸீ493.54
கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்ட 32 குடிநீர்த் திட்டப்பணிகளில் திருப்பத்தூர், வால்பாறை, கரூர், தேவக்கோட்டை அரக்கோணம், திருத்தணி, ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம், அறந்தாங்கி, மறைமலைநகர், சிவகங்கை, நாமக்கல், கூடலூர் மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன.
பல்லடம் நகராட்சியில் உட்கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்து கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளுக்குத் திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூர், ராசிபுரம், தஞ்சாவூர், விழுப்புரம் நகராட்சிகளிலும், ஈரோடு மாநகராட் சியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளக்கோயில், மேட்டூர், சிதம்பரம் ஆகிய 3 நகராட்சிகளில் பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், நேரடி நியமனம் மூலம் 2799 பேரும், கருணை அடிப்படையில் 1701 பேரும், தினக்கூலிப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்து 3074 பேரும், அரசு பொதுத்துறையில் பணிபுரிந்து பணியிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கல் மூலம் 134 பேரும் ஆக 7708 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 1266 பேருக்குக் கருணை அடிப்படையிலும், 1042 பேருக்கு நேரடியாகவும் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 328 பணியாளர்களுக்கு அவர்களது பணிவரன்முறைப்படுத்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. 10 ஆண்டு காலத்திற்கு மேல் பணிபுரிந்த 2025 தற்காலிக துப்புரவு பணியாளர்களுக்குப் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில் 2006 முதல் 2010 வரை சென்னை மாநகராட்சியில் மொத்தம் 4661 பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டம் மூலம் 416 வாரிசுதா ரர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 223 அலுவலர் மற்றும் பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கருணை அடிப்படையில் 48 இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், இளநிலை வரைவு அலுவலர், பதிவுறு எழுத்தர், அலுவலக உதவி யாளர், காவலர், துப்புரவாளர் ஆகியோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 858 தொகுப்பூதியப் பணியாளர்கள் காலமுறை பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
178 மதிப்பூதிய பணியாளர்கள் தொகுப்பூதியப் பணியாளர்களாகப் பணிமாற்றம் செய்யப்பட்டனர். 310 உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், இளநிலை நீராய்வா ளர்கள், மின் கண்காணிப்பாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோர் கீழ்நிலைப் பணியில் இருந்து பணியமர்வு வழங்கப்பட்டது. 52 உதவிப் பொறியாளர்கள், உதவி நிலநீர் வல்லுநர் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டனர்.
நகராட்சி நிர்வாகத் துறையில் நாள்தோறும் நல்ல திட்டங்களும், பணிகளும் நடைபெற்று வருவது கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அந்த மகிழ்ச்சிக்கு காரணம் நாடு அவற்றின் மூலம் பெற்று வரும் நன்மைகள் தான்.
நகராட்சி நிர்வாகத் துறையின் சிறப்பான பணிகளுக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுறுசுறுப்பான முனைப்பு தான் என்பதை என்னைப் போலவே எல்லோரும் அறிவர். அந்தப் பணிகள் தொடர பணிகள் தொடரட்டும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment