கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தியமைப்பு! கலைஞர் ஆணை!


தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் ஆட்சிக் குழு திருத்தியமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதலமைச்சர் கருணாநிதி இஸ்லாமிய சமுதாய மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று உருதுமொழி வளர்ச்சிக்காக 08.03.2000 அன்று, தமிழ்நாடு மாநில உருது அகாடமி என்னும் அமைப்பை உருவாக்கினார். இந்த உருது அகாடமியின் ஆட்சிக் குழு முதலமைச்சர் கருணாநிதியால் 18.02.2007 அன்று திருத்தியமைக்கப்பட்டது. அக்குழு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் உருது அகாடமியின் ஆட்சிக் குழுவினைத் திருத்தியமைத்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்:


இந்த ஆணையில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆட்சிக்குழுத் தலைவராகவும்,
சென்னை பல்கலைக் கழகத்தில் பன்மொழி அகராதித் திட்ட உறுப்பினராகப் பணியாற்றிய திரு. ஏ.எஸ். சஜ்ஜத் புஹாரி அவர்களைத் துணைத் தலைவராகவும்;

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் முனைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்;

சென்னைப் பல்கலைக் கழக பெர்சியன் மற்றும் உருது மொழித் துறைத் தலைவர் டாக்டர் பி. நிசார் அகமது;

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி உருது மொழித் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் பி. அகமது பாஷா;

கிருஷ்ணகிரி திரு. முக்தார் பத்ரி;

வாணியம்பாடி திரு. முகம்மது யாகூப் அஸ்லாம்;

சென்னை மீயாஸி உருது அகாடமி தலைவர் திரு. முகம்மது அஷ்ரப்;

கோவை அஞ்சுமன் இ உருது நிறுவனச் செயலாளர் திரு. சையத் பைய்ஸ் காதிரி;

சென்னை திரு மாலிக்குல் அசீஸ்;

சென்னை புதுக் கல்லூரி உருதுத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ். முசாஃபருதீன்;

சென்னை திரு. கே.எம். அஷ்பகூர் ரஹ்மான்;

கோவை திரு. கலீம்;

சென்னை திரு. அலீம் சபா நவீதி;

சென்னைப் பல்கலைக்கழக உருதுத் துறைப் பேராசிரியர் திரு. சஜ்ஜத் உஸ்ஸைன்;

வாணியம்பாடி மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழக கல்வி மையப் பொறுப்பாளர் திரு. சுகைல் அகம்மது;

சென்னை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி உருது மொழித் துறைத் தலைவர் டாக்டர் ஷஹீரா உம்மே ஷஹலா ஆகிய 15 பேரை உறுப்பினர்களாகவும் முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment