2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட் டில் பா.ஜ.க., ஆட்சியில் 25 விதி முறைகள் மீறப் பட்டுள்ளன;அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். 2001ஆம் ஆண்டில் இருந்து (தேசிய ஜனநா யக கூட்டணி ஆட்சி காலம் முதல்) 2009 ஆம் ஆண்டு வரை நடந்த ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் விதி முறைகள் மீறப்பட் டதா? முறைகேடுகள் நடந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்த நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையிலான ஒரு நபர் குழு, கடந்த ஜன வரி 31 ஆம் தேதி தனது அறிக்கையை தொலைத் தொடர்பு துறை அமைச் சர் கபில்சிபலிடம் தாக் கல் செய்தது.
அந்த அறிக்கையை கபில் சிபல் 04.02.2011 அன்று வெளியிட்டார். அதில் சில பரபரப்பான தகவல் கள் இடம்பெற்று உள் ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விஷயத் தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 2004ஆம் ஆண்டு வரை யிலும், அய்க்கிய முற் போக்கு கூட்டணி ஆட் சியில் 2008ஆம் ஆண்டு வரையிலும் சரியான நடைமுறைகள் பின்பற் றப்படவில்லை. அலை வரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்து உள்ளன. அய்க்கிய முற் போக்கு கூட்டணி ஆட் சியின் போது ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக் கீட்டுக்கான விலை நிர் ணயத்தில் சட்ட அமைச் சகத்தின் ஆலோசனை யையோ அல்லது நிதி அமைச்சகத்தின் கருத் துக்களையோ தொலைத் தொடர்பு துறை பின் பற்றவில்லை.
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டுக் கான உரிமங்கள் வழங் குவது தொடர்பாக 2003ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்புத் துறை எடுத்த நடவடிக் கைகள் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சிபாரி சுகளுக்கோ அல்லது மத்திய அமைச்சரவை யின் முடிவுக்கோ உகந்த தாக இல்லை. தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைகளும், அமைச் சரவையின் முடிவும் பின் பற்றப்படவில்லை. தவறுகள் நடந்துள்ளன.
25 விதிமுறை மீறல்கள்
உரிமம் வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிப்பது என்று 24.11.2003 தேதி அப்போதைய அமைச் சர் எடுத்த முடிவு, ஏற் கனவே வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு விரோதமானது ஆகும். 2009ஆம் ஆண்டு வரை 25 விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.
2007-2008 ஆம் ஆண் டில் அமைச்சரவையின் முடிவுக்கு விரோதமாக அலைவரிசை ஒதுக் கீட்டுக்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அலைவரிசை ஒதுக்கீட் டுக்கான உரிமம் வழங் கும் கடைசி தேதியை முன்கூட்டியே நிர்ணயித் தது நடைமுறைகளுக் கும், விதிமுறைகளுக்கும் முரணானது மட்டும் இன்றி, வெளிப்படை யான தன்மைக்கும் விரோதமானது ஆகும். அலைவரிசை ஒதுக்கீடு உரிமத்துக்கான விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி 1.10.2007 என்று அறி வித்து விட்டு, பின்னர் அந்தத் தேதியை 25-9-2007 என்று மாற்றி இருக் கிறார்கள்.
விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கட் டுப்படுத்தும் வகையில் இவ்வாறு மாற்றப்பட்டு உள்ளது. உரிமம் வழங் குவதில் கொள்கைகள் பின்பற்றப்பட வேண் டும், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான தன்மை வேண்டும் என் பது மீறப்பட்டு இருப் பது இதன் மூலம் தெரி கிறது.
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் எதிர் காலத்தில் இது போன்ற முறைகேடுகள், குறைபாடுகள் நடை பெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும். முத லில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையை மாற்றி தகுதி யின் அடிப்படையில், ஏல முறையில் ஒளிவு மறைவற்ற முறையில் உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய விவரங்கள் முறைப்படி தணிக்கை செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டு உள்ளது.
கபில்சிபல் பேட்டி
அறிக்கையை வெளி யிட்டு கபில்சிபல் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை எடுக்கப் பட்ட முடிவுகள் அனைத் தும் தவறானவை என்று சிவராஜ் பட்டீல் குழு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது. முதலில் வருபவர் களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைவரிசை ஒதுக்கும் முறையை தேசிய ஜன நாயக கூட்டணி அரசு தான் அறிமுகப்படுத்தி யது. பிழையான இந்த முடிவின் காரணமாக பல தவறுகள் நடந்துள் ளன. 1999ஆம் ஆண்டின் தொலைத் தொடர்பு கொள்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பின்பற்றவில்லை.
அலைவரிசை ஒதுக் கீடு விஷயத்தில் முந் தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையைத்தான் தான் பின்பற்றியதாக வும், அதில் இருந்து வில கிச் செல்லவில்லை என்றும் ஆ.இராசா கூறி இருக்கிறார். ஆனால் கடந்த ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட கொள்கையே தவறா னது என்பதுதான் இதில் பிரச்சினை ஆகும்.
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் உரிய கொள்கைகளை பின்பற்றாததற்கும், முறை கேடுகள் நடந்ததற்கும் முன்னாள் தொலைத் தொடர்பு துணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட 17 பேர் பொறுப்பு என்று குழு தனது அறிக்கையில் குறிப் பிட்டு உள்ளது.
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே வெளிப்படைத் தன்மை மற்றும் தொலைத் தொடர்புக் கொள்கை பின்பற்றப்படவில்லை. விதி மீறல்கள் தொடர்பாக தேசிய ஜனநாய கக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற சிவராஜ் பட்டீல் குழு சிபாரிசு செய்து உள்ளது. இந்த கமிட்டியின் அறிக்கையை சி.பி. அய்.க்கு அனுப்பி வைப்போம். 2001ஆம் ஆண்டு முதல் விதிமுறைகளுக்கு மாறாக வும், அமைச்சரவையின் முடிவுகளைப் பின்பற்றாமலும் மேற்கொண்ட முடிவு களுக்கு பொறுப்பானவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப் படும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.
நீதிபதி சிவராஜ் பட் டீல் குழுவின் அறிக்கை பற்றி பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில்: இது முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசாவை காப்பாற்ற மேற்கொள் ளப்பட்ட முயற்சி என்றும், அறிக்கை யில் உள்ள முழு விவரங்களை யும் படித் துப் பார்த்துவிட்டு பின்னர் விரிவாக பாரதீய ஜனதா கருத்துத் தெரிவிக்கும் என்று கூறினார்.
இந்தப் பிரச்சினை யில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் 1998ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த ஸ்பெக்ட் ரம் அலைவரிசை ஒதுக் கீடுகள் பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம் என்றும் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். பா.ஜ.க. ஆட்சியில் இருந்த அமைச்சர் அருண்ஷோரி உள்பட 20 பேர் சிக்குவார்கள். குற்றம் சுமத்திய பா.ஜ.க., மீதே பந்து திரும்புவது குறிப்பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment