சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட நூற்றுக்கணக்கான திமுகவினர் நேற்று (25.02.2011) விருப்ப மனுக்கள் கொடுத்தனர். முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்காக ஏராளமானவர்கள் மனுக்கள் தந்தனர்.
சட்டப் பேரவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து 25ம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்தது. விருப்ப மனு கட்டணம் ஸீ500, மனுவை பூர்த்தி செய்து பொது தொகுதிக்கு ஸீ5000, தனி தொகுதி, பெண்களுக்கு ஸீ2500 கட்டணம் செலுத்தி அண்ணா அறிவாலயத்தில் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் ஏராளமான திமுகவினர் தமிழகம் முழுவது மிருந்து வந்திருந்து ஆர்வத்துடன் மனுக்களை தந்தனர். முதல்வர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியிலும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கிலும் போட்டியிடக் கோரி தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் விருப்ப மனுக்கள் தந்தார். தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், துறைமுகம் தொகுதிகளில் போட்டியிட வடசென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்எல்ஏ மனுக்கள் தந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டு முதல்வர், துணை முதல்வருக்காக சைதாப்பேட்டை தொகுதிக்கு மனு கொடுத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் முதல்வர், துணை முதல்வர் போட்டியிட இ.ஏ.பி.சிவாஜி எம்எல்ஏ, ஆவடி நாசர் ஆகியோர் மனு கொடுத்தனர். அதேபோல் ஆவடி, அம்பத்தூரில் போட்டியிட முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி பணம் கட்டினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் முதல்வர், துணை முதல்வர் போட்டியிட அமைச்சர் பொன்முடி மனுக்கள் தந்தனர். விழுப்புரம் தொகுதியில் பொன்முடி போட்டியிட உதயசூரியன் எம்எல்ஏ மனு தந்தார்.
முதல்வர், துணை முதல்வர் அறந்தாங்கியில் போட்டியிட காசி முத்துமாணிக்கம் மனு கொடுத்தார். சிதம்பரம் முனவர் உசேன், ராயபுரம் பாண்டிசெல்வம், முதல்வர் கருணாநிதி திருத்தணியில் போட்டியிட நிர்வாகிகள் ரமேஷ்காந்த், அகூர் மாணிக்கம், ரவீந்திரன் மனுக்கள் தந்தனர். ராமநாதபுரம் தொகுதியில் முதல்வருக்காகவும் சேப்பாக்கத்தில் துணை முதல்வருக்காகவும் வர்த்தக சங்க தலைவர் வி.பி.மணி மனு கொடுத்தார். சேப்பாக்கத்தில் முதல்வருக்காக சுரேஷ்குமார், மதன்குமார் மனு தந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மனைவி பொற்கொடி மன்னார்குடி தொகுதிக்கும், வக்கீல் கவிதா திருவொற்றியூர் தொகுதிக்கும் அசோக் ஜெயின் துறைமுகம் தொகுதிக்கும் மனுக்கள் தந்தனர். தி.மு.க. அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம், க.தனசேகரன் விருகம்பாக்கம் தொகுதிக்கு மனுக்கள் தந்தனர்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி அண்ணாநகரில் போட்டியிட ராமலிங்கம், எழும்பூரில் அமைச்சர் பரிதி இளம்வழுதி போட்டியிட ஏகப்பன், அப்துல்ரகுமான் மனுக்கள் தந்தனர். கயல்விழி நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட கபிலன் மனு தந்தார். கடலூர் & தொகுதிக்கு வாஞ்சிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் மனுக்கள் தந்தனர்.
தலைமை நிலைய செயலாளர்கள் துறைமுகம் காஜா, ஆ.சதாசிவம், இளைஞர் அணி துணை செயலாளர் அசன்முகமது ஜின்னா, தொ.மு.ச. பேரவை செயலாளர் பி.டி.சி.பாலு, அறிவாலய நிர்வாகிகள் பத்மநாபன், ஜெயகுமார் மனுக்களை பெற்றனர். பணம் கட்டியவர்களுக்கு உடனுக்குடன் கம்ப்யூட்டர் மூலம் ரசீதுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment