
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத் திற்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை'' என்று கலை ஞர் தொலைக்காட்சி நிருவாகம் தெரிவித்துள் ளது.
கலைஞர் தொலைக் காட்சி நிருவாக இயக் குநர் சரத்குமார் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2007-08ஆம் ஆண் டில் மத்திய தொலைத் தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) விவகாரத் திற்கும் 2009-ஆம் ஆண் டில் கலைஞர் தொலைக் காட்சி மற்றும் சினிக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரி வர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.
கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்திற்கு 2009-ஆம் ஆண்டு சினிக் என்ற நிறுவனம் பங்கு கள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்தி ருந்தது.
ஆனால் 2 நிறுவனங் களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் 2009-ஆம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பண மும் கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது. அந்த தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது.
இந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப் படுத்தப்பட்டு அதற் கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த் தனையும் சட்டத்திற்கு உட்பட்டு உரிய அதி காரிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே ஆகும். -இவ் வாறு அவர் கூறியுள் ளார்.
No comments:
Post a Comment