ரூ.200 கோடி கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி கணக்கு களை, சி.பி.அய். அல்லது வருமான வரித்துறை சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கலைஞர் தொலைக்காட்சி நிருவாக இயக்குநர் கூறியுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சி நிறுவன நிருவாக இயக்குனர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10.2.2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், `2007-2008ஆம் ஆண்டில் மத்திய தொலைதொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2-ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ஆம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினிக் நிறு வனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த் தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. சினிக் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்ற 200 கோடி ரூபாய் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டுவிட்டது.
அந்த தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்து இருந்தேன்.
இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்திலே குறிப் பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத்துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எவ்விதமான சந்தேகம் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங் களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதிலே எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை.
-இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment