வரும் மே மாதம், தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடக்கிறது. இதற்குதிமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவும், காங்கிரஸ் தரப்பில் 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விரைவில் கூட்டணி சார்பில் போட்டியிடும் இடம், தொகுதி குறித்து பேசி முடிவு செய்வார்கள்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக முன்னணியினர் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். தேர்தலை முன்னிட்டு திருச்சியில் திமுக மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மு தல்வர் கருணாநிதி தலைமையில் 12.02.2011 அன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான அன்பழகள் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 12.02.2011 அன்று மாலையில் நடந்தது. இதில், வரும் மார்ச் 27ம் தேதி (ஞாயிறு) திருச்சியில் திமுக மாநில மாநாட்டை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். இந்த மாநாட் டில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment