கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 21, 2011

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 9ஆம் தேதி விசாரணை


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்து பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட் டது. தமிழக முன்னாள் முதல் அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளருமான ஜெய லலிதா, சசிகலா, சுதா கரன், இளவரசி ஆகி யோர் மீது சொத்து குவிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை பெங்களூரு தனி நீதிமன் றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பெங் களூரு தனி நீதி மன்றத் தில் நேற்று கூடியது. நீதிபதி மல்லிகார் ஜுனய்யா முன்னிலை யில் அரசு உதவி வழக் குரைஞர் சந்தீப் சவுட்டா, ஜெயலலிதா வழக்குரை ஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். கடந்த விசா ரணையின்போது ஜெய லலிதா சார்பில் 3 மனுக் கள் தாக்கல் செய்யப் பட்டன. அந்த மனுக்கள் மீது 19.02.2011 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதன் படி 16.02.2011 அன்று நீதிமன்றம் கூடியதும், ஜெயலலிதா சார்பில் கேட்டபடி 17 சாட்சிகளின் ஆவணத் தில் தவறுகள் சரிசெய் யப்பட்ட விவரங்கள், சரியான நேரத்தில் வழங் கப்படும் என்று நீதிபதி கூறினார்.

அதே சமயத்தில் மீதி உள்ள சாட்சிகளின் ஆவணங்களில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்ட நான்கு வார கால அவகாசம் கேட்ட ஜெய லலிதாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய் தார். கிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள இரண்டு மனுக்களும் அர்த்தமற்றதாக உள் ளன. இந்த வழக்கை மேலும் காலங்கடத்தும் நோக்கத்தில் அந்த மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டு உள்ளன. எனவே, அந்த மனுக் களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு உதவி வழக்குரைஞர் சந்தீப் சவுட்டா கூறி னார். இதை தொடர்ந்து விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தர விட்டார். மேலும் அன்று குற்றம் சாற்றப் பட்டவர்களின் வாக்கு மூலம் பதிவு செய்யப் படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment