கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, February 10, 2011

ஆதாரமில்லாமல் பேசுவதா? - அதிமுக எம்.எல்.ஏ.க்கு முதல்வர் கண்டனம்


ஆதாரமில்லாமல் பேசக்கூடாது என்று அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
பேரவையில் 09.02.2011 அன்று இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. இதில் சி.வி.சண்முகம் (அதிமுக) பேசினார். அப்போது, அவர் அரசுக்கு எதிராக சில வார்த்தைகளை குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து,
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சி.வி.சண்முகம் இங்கே உரையாற்றியபோது, டாடா நிறுவனத்துக்கும், டி.எல்.எப். நிறுவனத்துக்கும் தரமணியில் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் குறித்து, இங்கே சில கருத்துக்களை குறிப்பிட்டார்.
இந்த பொருள் குறித்து இதே அவையில் 10&5&2010 அன்று, எதிர்க்கட்சி துணைத் தலைவரால் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டு, அது 11&5&2010 அன்று விரிவான விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதத்தினுடைய இறுதியிலே விளக்கமான விவரங்களை எல்லாம் நான் குறிப்பிட்டு காட்டியிருக்கிறேன்.
அந்த விளக்கத்தை அறியாமல் & தெரியாமல், சி.வி.சண்முகம் இங்கு பேசியிருக்கிறார். அவர் பேசியதற்கு ஆதாரம் இருந்தால், அதற்குரிய நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. எனவே, ஆதாரம் இல்லாமல் அவர் பேசியிருக்கிற காரணத்தால், அவர் பேசிய வார்த்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்:
சி.வி.சண்முகம் ஆதாரமில்லாமல் பேசிய அந்த வார்த்தைகள் நீக்கப்படுகிறது.
இவ்வாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டதும், அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சி.வி.சண்முகம் பேச முற்பட்டார். அப்போது,
முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டுப் பேசியதாவது:
ஏற்கனவே இந்த அவையில் முன்னாள் அமைச்சராக இருந்த, மறைந்த குழந்தைவேலு இப்படித்தான் Òஎன்னிடத்திலே ஆதாரம் இருக்கிறது” என்று என் மீது ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். (அதிமுகவினர் குறுக்கீடு) நான் அப்போதே அதை மறுத்து Òஆதாரம் இருந்தால் அதைக் காட்டுங்கள் & இல்லாவிட்டால் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் ஆதாரத்தைக் காட்டினால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்றுகூடச் சொன்னேன்.
அப்போது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். ஆனால், ஆதாரத்தை அவர் காட்டவில்லை. ஆதாரத்தை காட்டுவதற்குப் பதிலாக, ஒரு போலி ஆதாரத்தைக் கொண்டு வந்து & அன்றைய சபாநாயகராக இருந்த ராஜாராமிடம் கொடுத்தார். அதை ராஜாராம் வாங்கி, அவருடைய அறையிலே ஆய்வு செய்தபோது, Òஇது போலியான ஆதாரம்& உண்மையான ஆதாரம் இல்லை” என்று குறிப்பிட்டார்.
நான் உடனே கேட்டேன். Òஅன்றைக்கு ஒரு நிபந்தனையை ஏற்றுக் கொண்டாரே அதை இப்போது செயல்படுத்துவாரா” என்று நான் கேட்டபோது Òநான் தயார்” என்று அவர் சொன்னார். பிறகு எம்.ஜி.ஆர். அதிலே தலையிட்டு, Òஇத்தோடு நிறுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக, அந்த பிரச்னை அப்போது நிறுத்தப்பட்டது. ஆதாரங்களை காட்ட முடியவில்லை & தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவும் அவர் தயாராக இல்லை. இப்போதும் நம்முடைய நண்பர் சண்முகம் ஆதாரம் காட்டுவேன் என்று சொல்கிறார். எந்த நிபந்தனையோடு அவர் சொல்கிறார் என்று நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் பேச முற்பட்டார்.
நிதி அமைச்சர் அன்பழகன்:
பேரவைத் தலைவர் தீர்ப் பளித்த பிறகு மேற்கொண்டு விவாதத்துக்கு அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு விவாதம் நடந்தது

No comments:

Post a Comment