தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் 13 நாட்கள் கலை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா 26.02.2011 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கவிஞர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் திரையரங்கத்தை திறந்து வைத்தார். நாடக நடிகர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கும் இசைக்கருவிகளையும் அவர் வழங்கினார்.
விழாவில், அவர் பேசும்போது, ’’இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் என்ற நிலை முன்பு இருந்தது. ஒரு சாராருக்கு மட்டும்தான் அந்த விருது என்ற நிலையை மாற்றி, நாட்டுப்புற கலைஞர்களுக்கும் கிடைக்க செய்தவர், முதலமைச்சர் கலைஞர்தான். ஒரு நாட்டில் ஆட்சி என்பது அரசியல் சார்ந்தது மட்டுமல்ல. கலைவடிவங்களும் சார்ந்ததுதான். எத்தனையோ ஆட்சிகளில் கிடைக்காத மாற்றம் சமீபத்தில் கிடைத்துக்கொண்டிருக்கிறது. நம் மொழி சார்ந்த அடையாளங்கள் போற்றக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் நவீன கலைஞர்கள், கவிஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். கொண்டாடப்படுகிறார்கள். கிராமிய கலைஞர்கள் போற்றப்படுகிறார்கள். இது, வேறு எந்த ஆட்சியிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment