கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 19, 2011

நான் 6ஆவது முறையாக முதல் அமைச்சராக வந்தால் 125 கலைஞர்களுக்கு அல்ல; 225 பேருக்கு விருதுகள் வழங்கப்படும்! - கலைஞர்


நான் 6ஆவது முறையாக முதல் அமைச்சராக வந்தால் 125 கலைஞர்களுக்கு அல்ல, 225 பேர்களுக்கு விருது வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் கலைஞர் கூறினார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008ஆம் ஆண்டுக் கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 13.02.2011 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு முதல் அமைச்சர் கலைஞர் தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். பாரதி விருது எழுத்தாளர் ஜெயகாந்த னுக்கும், சுப்புலட்சுமி விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாலசரஸ்வதி விருது நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது. நடிகர்கள் சின்னிஜெயந்த், கருணாஸ், ஆர்யா, பப்லு, வி.எஸ்.ராகவன், நடிகைகள் சரோஜாதேவி, ரோகினி, சரண்யா, மாளவிகா, அனுஷ்கா, தமன்னா மற்றும் தமிழறி ஞர் தமிழண்ணல், பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் அய்.லியோனி, பார்வையற்ற இசைக் கலைஞர் காயத்ரி சங்கரன் உள்பட 75 கலைஞர்கள் கலைமாமணி விருதை பெற்றனர்.

கவிஞர் கனிமொழி நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், பிருத்விராஜ், விஜய் ஆதிராஜ், நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகன்யா, தேவயானி, நளினி, சத்யப்பிரியா மற்றும் இயக்குநர்கள் ராஜீவ்மேனன், திருமுருகன், கவுதமன், செய்யாறு ரவி, பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் உள்பட 41 பேருக்கு சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டன. கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர் களான கஞ்சிரா கலைஞர் சோமசுந்தரம், தவில் வித்வான் கே.செல்லப்பா, நாடக நடிகை ரேணுகாதேவி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டன.

கலைஞர்களை...

கலைமாமணி விருது விழா மலரை முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட, முதல் பிரதியை கவிஞர் கனிமொழி, எம்.பி. பெற்றுக்கொண்டார். முன்னதாக, கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி முதல் அமைச்சர் கலைஞர் பேசும்போது கூறிய தாவது: பாரதி விருது பெற்ற அன்புக்குரிய நண்பரும், புரட்சி எழுத்தாளருமான நண்பர் ஜெயகாந்தன் பேசும்போது, இது ஒரு பொற்காலம் என்று குறிப்பிட்டார். பொற்காலம் என்பது கலைஞர் களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல் லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ என்றைக்கும் அந்த நற் காலம் நீடிக்கின்ற நிலைமை ஏற்படுகிறதோ அதுதான் பொற்காலம்.

இதைப் பொற்காலம் என்று நான் சொன்னால் நீ அப்படித்தான் சொல்லிக் கொள்வாய்; ஏனென்றால், ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், இந்த ஆட்சியைப் பொற்கால ஆட்சி என்று நீ கூறுவதிலே ஆச்சரியமில்லை என்று நீங்கள் எண்ணக் கூடும் அல்லது சொல்லக் கூடும். ஆனால், நண்பர் ஜெயகாந்தன், எதையும் விமர் சிக்கக் கூடியவர்; நாணயமாக விமர்சிக்கக் கூடியவர்; நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர்; அச்சத்திற்கு ஆட்படாமல், எந்த விதமான சலுகைகளையும் எதிர்பாராமல், மனதில் பட்டதை பட் என்று சொல்லக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.

பொற்கால ஆட்சி

அப்படிப்பட்டவர் இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று சொன்னதை தமிழகத்திற்கு இது பொற்காலம் என்று கூறியதை இன்றைக்கு உங்களுக்கெல்லாம் வழங்கப்பட்ட பொன்னா லான பதக்கத்தை விட அழகாக வரைந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பட்டயங்களை விட சிறந்த பரிசாக எனக்கு அவர் வழங்கிய பரிசாக நான் நன்றியோடு அதை எடுத்துக்கொள்கிறேன். நல்லவர்களுடைய வாழ்த்து ஜெயகாந்தனைப் போன்ற தமிழ்வல்லுநர்களுடைய வாழ்த்து, இந்த ஆட்சிக்கு, எங்களுக்கு என்றென்றும் தேவை.

ஒரு காலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதத் தொடங்கி, அவற்றை எல்லாம் எங்கள் இயக்கத் தோழர்களால் படிக்கப்பெற்றபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவரல்ல; எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்; எங்களுடைய எழுத்துகளை அன்றைய தினம் பாராட்டாதவர், இன்றைக்கு பாராட்டுகிறார் என்றால், நாங்கள் அப்படிப்பட்ட பாராட்டைப் பெறுவதற்கு குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்கின்ற அளவிற்கு, அவர் எங்களைத் தாக்கி, மறுத்து எழுதியபோதெல்லாம் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றோம். ஏனென்றால் அவருடைய விமர்சனத்தில் பொருள் இருக்கும். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். அவருடைய விமர்சனத்தில் தேவையற்ற வெறுப்பு இருக்காது, உண்மையை உள்ளவாறு எடுத்துக்காட்டி அதை விளக்கக் கூடியவர். இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு நான் எழுத வேண்டுமே என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்கிற அளவுக்கு என்னுடைய எழுத்து இருக்கிறதென்றால், நான் கொடுத்து வைத்தவன் நான் என்னையே பாராட்டிக்கொள்ளக் கூடிய அளவிற்கு அவர் இன்றைக்கு இந்த விழாவிலே இது பொற்காலம் என்று குறிப்பிட்டார்.

சிலர் கற்காலமாக்க!

பொற்காலத்தைக் கற்காலமாக ஆக்க வேண்டுமென்று கருதுகின்ற சில பேர் இன்று நாட்டிலே இருக்கிறார்கள். இதைப் பொற் காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தனைப் போன்றவர்களுடைய எழுத்து பயன்படு மேயானால், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; இது தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும் என்பதைச் சொல்லி, அதற்கு ஜெயகாந்த னுடைய தமிழ்ப்பணி பயன்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு ஏறத்தாழ 120 விருதுகள் சின்னத் திரை கலைஞர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், கலைமாமணி விருதுகள் 75 பேருக்கு மேல் வழங்கப் பட்டிருக்கின்றன. காலையிலே ஒரு பத்திரிகையிலே பார்த்தேன். இலவசங்களை வாரி இறைப்பதைப் போல் கலைஞர் விருதுகளை வாரி இறைத் திருக்கிறார் என்று கிண்டலாகப் போட்டி ருந்தார்கள்.

இது ஓராண்டிற்கான விருதுகள் அல்ல; இரண்டு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன. இலவசங்கள் என்று சொல்வதின் மூலமாக இந்த விருதுகளை அவர்கள் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆனால், இலவசம் ஒரு ஏழைக்கு கிடைத்தால், பசியோடு இருப்ப வனுக்கு கிடைத்தால், இல்லாதவனுக்கு கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளைப் பெறுகிறவர்கள் அடைவதை விட, இந்த விருதுகளை வழங்கிய நான் பெறுகிறேன் என்று நான் அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன்.

நான் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு 125 விருதுகள் தரப்பட்டிருக்கின்றன. அந்த பத்திரிகையின் கேலி, கிண்டலுக்கு பிறகு, நான் அறிவிக்கிறேன், நீங்கள் எல்லாம் அனுமதித்து, ஆறாவது முறை நான் பொறுப்புக்கு வந்தால், 125 அல்ல, 225 விருதுகள் வழங்கப்படும்.


இவ்வாறு முதல் அமைச்சர் கலைஞர் கூறினார்.

செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வாழ்த்திப் பேசினார். விருது பெற்றவர்கள் சார்பில் எழுத்தாளர் ஜெயகாந்தன், இசையமைப்பாளர் இளையராஜா, பத்மா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment