சாதாரண மக்களின் நலனை பாதுகாப்பதற் காக தமிழக அரசு ஏரா ளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் திடீ ரென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பல குறைபாடுகளை கண்டறிந்தார்.
நீதிமன்ற அறைகள், வழக்குரைஞர்கள் சங்க அறை போன்றவற்றில் போதிய அளவில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டி ருக்கவில்லை. மேலும் அங்கு போதிய அளவில் கழிவறை வசதிகள், குடி நீர் வசதிகள் போன்றவை செய்து தரப்படவில்லை.
எனவே இதை தனி (சூ-மோட்டோ) வழக் காக தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் எடுத்துக் கொண்டார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதிகள் பி.ஜோதி மணி, டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரிக்கின் றனர்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை பெரு நகர தலைமை நீதிபதி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்று அங்குள்ள அவலங்களை பார்வையிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலும் அங்குள்ள அவலங்களை பட்டிய லிட்டு அவற்றை உடனே நிவர்த்தி செய்வது தொடர்பாக நீதிமன்றத் தில் 14ஆம் தேதி (நேற்று) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி பதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தை ஆய்வு செய்து, கூடுதல் அட்வ கேட் ஜெனரல் பி.வில் சன் நேற்று நீதிபதிக ளிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
அங்குள்ள குறை களை அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவற்றை போர்க்கால அடிப்படையில் தீர்ப்ப தற்கு அரசு தீவிர நட வடிக்கை எடுக்க இருப்ப தாகவும் அவர் தெரி வித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வரு மாறு:-
ஜார்ஜ் டவுன் நீதி மன்றத்தில் உள்ள அவல நிலையையும் அதை நிவர்த்தி செய்வதற்கான தேவைகளையும் உணர்ந்து அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கை யையும், மனுவையும் படித்துப் பார்த்தோம். மரச்சாமான்கள், குடிநீர், கழிவறை வசதிகள், கழி வறையுடன் கூடிய கைதி களுக்கான அறைகள் போன்றவை இன்னும் 2 வாரங்களுக்குள் செய்து தரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களுக்கு கட்டடம் கட்டித் தரு வது உட்பட அனைத்து உள்கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தித்தருவ தற்கு தமிழக அரசு எப் போதும் தயாராக இருப்பதாக உள்துறை செயலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். நீதித் துறைக்கு தேவைகள் ஏற்படும் போது எப்போதுமே அதிகபட்ச முன்னு ரிமை அளிக்கப்படும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள் ளார்.
சாதாரண மக்க ளுக்கு தமிழக அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதில் எந்த சந்தேக மும் இல்லை. ஆனால் அரசு தொடர்பாக நாங் கள் கூறிய கருத்துகள், அரசுத் திட்டங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உள்ளவை அல்ல. நீதித்துறை மீதும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற் படுத்தித் தரவேண்டும் என்ற ஆர்வத்தில் கூறிய கருத்துக்கள் அவை.
ஜார்ஜ் டவுன் நீதி மன்றத்துக்கு தேவை யான உள்கட்டமைப்பு வசதிகளை 2 வாரத் துக்குள் ஏற்படுத்தித் தரு வதற்காக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து அரசுக்கு எங்கள் பாராட்டுகளை பதிவு செய்கிறோம். அதை நிறைவேற்றுவதற்கு வசதியாக பிப்.28ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைக்கிறோம்.
மற்ற நீதிமன்றங் களுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் பற்றி அடுத்ததாக வழக்கு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் 3 உறுப் பினர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண் டும் என்று கூடுதல் அட் வகேட் ஜெனரல் பி.வில் சன் கருத்து தெரிவித்தார்.
அதனடிப்படையில் நீதிமன்ற தலைமை பதி வாளர், உள்துறை செய லாளர், தலைமை பொறி யாளர் (கட்டடங்கள்) ஆகியோர் கொண்ட குழுவை நியமிக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத் திலும் உள்ள நீதிமன்றத் தின் தேவைகள் பற்றிய ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை இந்தக் குழு சமர்ப்பிக்க வேண் டும்.
ஜார்ஜ் டவுன் நீதி மன்றம் உள்பட அனைத்து நீதிமன்றங்களின் சொத்து அறைகளில் உள்ள பொருள்களை அப்புறப் படுத்துவதற்கு, குற்றவிசாரணை முறைச் சட்டத்தின் 452, 454-ஆகிய பிரிவுகளின்படி மாவட்ட முதன்மை நீதி பதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவை யான மரச்சாமான்களை குறிப்பிட்ட நேரத்துக் குள் தயாரித்து வழங்கு வதில் டான்சி நிறுவனம் நல்ல முறையில் செயல் படுவதில்லை. எனவே வேறு நிறுவனங் களிடம் இருந்து மரச் சாமான் களை வாங்கும் நடவ டிக்கையை அர சுக்கே விட்டுவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment