கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 21, 2011

தி.மு.க. - பா.ம.க. கூட்டணி: பா.ம.க.வுக்கு 31 இடங்கள்








தி.மு.க வுடன் பா.ம.க. தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதுகுறித்து சென்னை யில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு 18.02.2011 அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டி விவரம் : டில் லிக்கு நான் சென்றிருந்த போது, திருமதி சோனி யாகாந்தி அவர்களைச் சந்தித்து - வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து போட்டியிடு வது என்று தீர்மானிக் கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன் றைக்குப் பாட்டாளி மக் கள் கட்சியோடு ஒப் பந்தம் ஏற்பட்டு - தி.மு.க. -வுடன் இணைந்து இந் தத் தேர்தலில் பாட் டாளி மக்கள் கட்சியும் போட்டியிடும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்: 2 மணி நேரமாக முதல்வ ரோடு பேசியிருக்கிறீர் கள். என்ன முடிவு எடுத் திருக்கிறீர்கள்?

ச. ராமதாசு: எனது பெயரன் திருமண அழைப் பிதழைக் கொடுப்பதற் காக வந்தேன். அதோடு தேர்தல் உடன்பாடும் ஏற்படுத்திக் கொள்ள வந்தேன். மகிழ்ச்சி யோடு முதல்வரைச் சந் திக்கச் சென்றேன் - இப் போது மகிழ்ச்சியோடு உங்களைச் சந்திக் கிறேன்.

31 இடங்கள்

பத்திரிகையாளர்: எத்தனை இடம் உங்க ளுக்கு ஒதுக்கப்பட்டுள் ளது?

ச. ராமதாசு: 31 சட் டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதோடு ஒரு மாநிலங் களவை இடமும் ஒதுக் கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் : கடந்த தேர்தலில் போட் டியிட்ட அதே தொகுதி களில் போட்டியிடுவீர்களா?

ச. ராமதாசு: எந் தெந்த தொகுதிகள் என் பதை தேர்தல் குழுக்கள் முடிவு செய்யும்.

பத்திரிகையாளர் : சோனியாகாந்தி அம்மை யாரை எப்போது சந்திப் பீர்கள்?

ச. ராமதாசு: முன் னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அவர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு சோனியா அம் மையாரைச் சந்தித்திருக் கிறார்.

பத்திரிகையாளர் : திருமண அழைப்பித ழைக் கொடுக்க வந்த நீங்கள், தேர்தல் உடன் பாட்டை எதிர்பார்த்து வந்தீர்களா?
ச. ராமதாசு: எதிர் பார்த்துதான் வந்தேன்.

பத்திரிகையாளர் : 45 தொகுதிகள் ஒதுக்கும் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம் என்று சொன்னீர்களே?

ச. ராமதாசு: தேர்த லுக்கு முன்னால் ஊடக நண்பர்களைச் சந்திக்கும் போது நாம் எண்ணிக் கையை அதிகப்படுத்தித் தான் சொல்ல வேண்டும்.

பத்திரிகையாளர் : எதிர்க்கட்சிகள் - தி.மு.க. மற்றும் அதனோடு கூட் டணி வைத்துக் கொள் ளும் கட்சிகளை வீட் டுக்கு அனுப்புவோம் என்று சொல்லியிருக்கிறார் களே?

மிகப்பெரிய வெற்றி

ச. ராமதாசு: வருகிற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான அணியில் - தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி, இன்னும் பல கட் சிகள் சேரவிருக்கின்றன. இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.

பத்திரிகையாளர் : கடந்த முறை அள்ளியும் கொடுக்கவில்லை - கிள்ளியும் கொடுக்க வில்லை என்று சொல் லியிருந்தீர்கள். இந்த முறை அதே அளவிற்குத் தான் இடம் பெற்றி ருக்கிறீர்களே?

ச. ராமதாசு: நீங்கள் அதை எப்படி வேண்டு மானாலும் எண்ணிக் கொள்ளுங்கள். பத்திரிகையாளர்: பாட் டாளி மக்கள் கட்சியி னுடைய பார்கெயினிங் பவர் குறைந்து இருக் கிறதா?

ச. ராமதாசு: குறை யவும் இல்லை - கூடவும் இல்லை.

தொல். திருமாவளவன் வரவேற்பு

தி.மு.க. பா.ம.க. இடையே இன்று உடன் பாடு ஏற்பட்டதை அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் எம்.பி. வரவேற்றுள்ளார்.

No comments:

Post a Comment