கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 25, 2011

அண்ணா எதை விரும்பினாரோ அதை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது: அன்பழகன்


அண்ணா எதை விரும்பினாரோ அதை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது என, நிதியமைச்சர் அன்பழகன் பேசினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் கடம்பத்தூரில் ரூ.11/2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர்,


கலைஞர் ஆட்சியில் ஏராளமான அரசு கட்டிடங்கள் பிரம்மாண்டமான அளவில் தமிழ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடம்பத்தூரில் ரூ.11/2 கோடி செலவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


இதற்கு முன்பு தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு போதிய அதிகாரம் இல்லை. தற்போது மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் போக்குவரத்து, குடிநீர், மின்விளக்குகள், சுகாதாரம், பள்ளிக்கூடங்கள் வசதி என ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த வைரம் பாராட்டு விழாவில் இந்தியாவில் உள்ள சிறந்த மாநிலத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட 8 விருதுகளில் தமிழ்நாடு 4 விருதுகள் பெற்று சாதனை படைத்தது. பிரதமர் மன்மோகன்சிங்கே தமிழ்நாட்டை பாராட்டி பேசியுள்ளார். அண்ணா எதை விரும்பினாரோ அதை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அனைத்து கிராமப்பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.No comments:

Post a Comment