கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 19, 2011

60 ஆண்டுகளாக பேசியும், எழுதியும் வரக்கூடிய தலைவர் கலைஞர் - மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் புகழாரம்!முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் எழுதிய மணிவேந்தன் கவிதைகள், தமிழாலயச் சுவடுகள் (தமிழாலயம் இதழில் வந்த தலையங்கம்) என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழா 12.2.2011 அன்று மாலை 6.50 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப்பாவாணர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.
வானவில் புத்தகாலய பதிப்பகத்தாரான சுப.புக ழேந்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மு.பி.பாலசுப்பிரமணியன்

நூல்களை அறிமுகம் செய்து வைத்து நூலா சிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன் உரையாற்றினார்.

மணிவேந்தன் கவிதைகள் என்பது 1965ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் வரை வந்த கவிதைகள், அதேபோல தமிழாலயம் இதழில் மு.பி.பா. அவர்களால் எழுதப்பட்ட தமிழாலயச் சுவடுகள் என்ற இரு நூல்களைப் பற்றி அவர் விளக்கினார்.

அடுத்து நூல் வெளியீடு நடைபெற்றது. முனை வர் மு.பி.பா அவர்கள் எழுதிய மணிவேந்தன் கவி தைகள் என்ற நூலையும், தமிழாலயச் சுவடுகள் என்ற நூலையும் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் பணம் கொடுத்து பலத்த கைத்தட் டலுக்கிடையே பெற்றுக் கொண்டார்.

மேலும் மாம்பலம் ஆ.சந்திரசேகர் (சந்திரசேகர் கட்டுமானக் கழக நிறுவனம்), மா.பா.அன்புதுரை எம்.சி., இலக்கிய அணிச் செயலாளர் ஏ.எல்.ஆறு முகம், மா.வள்ளிமைந்தன், தென்சென்னை இலக் கிய அணிச் செயலாளர் சா.தேவராசு, சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு தலைவர் கயல் தினகரன், எழுத்தாளர் வே.எழில்அரசு ஆகியோர் பணம் கொடுத்து நூல்களைப் பெற்றுக் கொண் டனர்.

அடுத்து பிரபல எழுத்தாளர் சென்னை தொலைக் காட்சி முன்னாள் இயக்குநர் எ.நடராஜன், வசந்தி ஸ்டேன்லி எம்.பி. ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம் எம்.சி. பொன்னாடை அணி வித்தார். (புத்தகமும் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டார்).

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அவர்களுக்கு தாமஸ் ஜெயபால் பொன்னாடை அணிவித்தார். சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு முன்னாள் மேயர் சா.கணேசன் பொன்னாடை அணிவித்தார்.

எழுத்தாளர் எ.நடராசன் அவர்களுக்கு எழுத் தாளர் வே.எழிலரசன் பொன்னாடை அணிவித்தார். வசந்தி ஸ்டேன்லிக்கு மு.பி.பா மருமகள் சோபியா பொன்னாடை அணிவித்தார்.

மேயர் மா.சுப்பிரமணியன்

வானவில் புத்தகாலய பதிப்பகத்தார் சுப.புகழேந்தி அவர்களுக்கு மலர்மாமணி இளஞ்செழியன் பொன்னாடை அணிவித்தார்.

அடுத்து சென்னை மாநகர மேயர் தமதுரை யில், மாலை 6 மணிக்கு நமது ஆசிரியர் அவர் களும், நிதித்துறை அமைச் சர் அவர்களும் மேடைக்கு வந்துவிட்டார்கள் என்று மு.பி.பா தொலைபேசி யில் கேட்டபொழுது சற்று அதிர்ந்து போனேன். காலையில் ஆர்.கே. நகர் பகுதியில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற பணியில் அந்தப் பகுதிக்குச் சென்று பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 1600 மனுக்களை அந்த நிகழ்ச்சியிலேயே தீர்த்து முடித்து விட்டு வந்தோம். அடுத்து வரும் 15ஆம் தேதி சென்னை மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாக வேண்டும். அதை மாலையில் வந்து படித்து சரிபார்த்து அச்சுக்கு கொடுத்துவர சற்று காலதாமதமாகி விட்டது. அதற்காக முதலில் எனது மன்னிப்பை கோருகிறேன்.

இந்நிகழ்ச்சியை முடித்து 5 திருமணங்களுக்குச் சென்று துணை முதல்வரை இரவு ரயில் நிலையத் திற்குச் சென்று திருச்சிக்கு வழியனுப்பியாக வேண் டிய அவசர பணியில் வந்திருக்கின்றேன்.

மு.பி.பா அவர்களின் நூல்களை மாநகராட்சியின் கல்வித் துறை சார்பில் 67 மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு வாங்கி வழங்கப்படும். ரூ. 200 கோடி செலவில் கோட்டூர்புரத்தில் முதல்வர் கலைஞர் அவர்கள் அண்ணா நினைவு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.

பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் கருத்துகளை மு.பி.பா. தனது நூலில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார். - இவ்வாறு அவர் பேசினார்.

எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தமதுரையிலே குறிப்பிட்டதாவது: நான் பச்சையப்பன் கல்லூரி மாணவன். எனது மாமன்மார்களில் ஒருவர் தி.க., இன்னொருவர் திமுக. இரண்டு பேரும் மாறி, மாறி எங்கள் ஊரில் என்னை நூலகத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு அழைத்துக் கொண்டு போய் படிக்க வைப்பார் கள். முதலில் கறுப்பு சட்டை போட்டிருந் தேன். பிறகு கறுப்போடு சிவப்பும் சேர்ந்திருக்கட் டுமே என்று தி.முக.வில் இணைத்துக் கொண் டேன்.

ஒரு முறை பொன்னர்-சங்கர் கதை எழுதுவதற் காக தலைவர் கலைஞர் தஞ்சாவூர் வந்திருந்தார். அவரை வரவேற்று வழி அனுப்பி வைக்க நான் வந்திருந்தேன். அவர் காரில் புறப்படும் பொழுது வணக்கம் வைத்தேன். அப்பொழுது அவரை வரவேற்க முக்கியமானவர்கள் அங்கு இல்லை. படித்தவர் ஒருவர் தன்னுடன் வரவேண்டுமென்று தலைவர் கலைஞர் என்னை காரில் ஏற்றிக் கொண்டார்.

வழியில் இருவர் காரில் ஏறுவார்கள். அவர் களிடம் நான் கேள்வி கேட்கும்பொழுது எப்படி படிக்காதவர்களாக தனக்கு தெரிந்த எதையோ, கூறுவார் பார் என்று சொன்னார் கலைஞர். அதேபோல முதலில் அன்பில் காரில் ஏறினார். குங்குமம் படித்தாயா? என்று கலைஞர் கேட்டார். அவர் குங்குமத்தில் இந்த கதையைப் படித்தாயா என்று கலைஞர் கேட்டார். அவர் அவர் அதை படிக்காமல் வேறு ஒரு கருத்தை சொன்னார்.

அதே போல மாவட்டச் செயலாளர் வடிவேல் அடுத்து கார் செல்லும் வழியில் ஏறினார். குங்குமத் தில் இதைப் படித்தாயா என்று கலைஞர் கேட்டார். அது கவுண்டர் பற்றிய கதை என்று இவர் சொன்னார். கலைஞர் அவர்கள் சொன்ன மாதிரியே நடந்தது.
அப்பொழுதுதான் எனக்குப் பயம் வந்தது. தலைவரே இப்படி கேள்வி கேட்கிறார். இனிமேல் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று அப்பொழுது தான் என்னை தயார் செய்து கொண்டேன்.

எனக்கு அரசியல் வழிகாட்டி அண்ணன் மாறன் தான். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பு எதையும் நன்கு படித்து விட்டு பதிவு செய்ய வேண்டியவைகளை பதிவு செய்ய வேண்டும். நல்ல இரு முத்திரை செய்திகளை பதிவு செய்ய எப்பொழு தும் தவறக் கூடாது என்று சொல்லுவார்.

அவரிடம் ஏராளமான முறை விவாதம் செய்திருக் கிறேன். அப்படி விவாதம் செய்கிறவர்களைத்தான் அவருக்குப் பிடிக்கும்.

தலைவர் கலைஞர் அவர்களிடத்திலே ஒருமுறை கேட்டேன். அண்ணா, கலைஞர் என்ற பெயரே நமது தஞ்சை மாவட்டத்தில் இல்லையே! எல்லாம் சம்பத், நெடுஞ்செழியன் என்ற பெயர் தானே இருக்கிறது என்று சொன்னேன்.

அதற்கு தலைவர் கலைஞர் சொன்னார். எல்லா குழந்தைகளுக்கும் அப்படிப்பட்ட பெயர்களை நான் சூட்டினேன். என்னுடைய பெயரை எவரும் சூட்டவில்லையே என்ன செய்ய என்று சொன்னார்.

அதிலிருந்து எந்த ஆண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டுமானாலும் கருணாநிதி, மாறன் என்று தான் பெயர் சூட்டுவேன்.

60 ஆண்டுகளாக பேசுபவர் - எழுதுபவர் தலைவர் கலைஞரும் தமிழர் தலைவரும்

இன்றைக்கு நம்மிடையே எழுத்தாளர்கள் இல்லை. பேச்சாளர்கள் இல்லை. கடந்த 60 ஆண்டு களாக தொடர்ந்து பேச்சுகளை பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் வருகின்ற இருவர்தான் உள்ளனர். ஒருவர் தலைவர் கலைஞர். இன்னொரு வர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்.

திராவிடர் இயக்க வரலாற்றை திராவிடர் இயக்கத் தலைவர்களைப் பற்றி மு.பி.பா. மிகச் சிறப்பாக எழுதியிருக்கின்றார். எல்லோரும் நன்றாகப் படிக்க வேண்டும். பேச வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

இறுதியாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

பா.கலையரசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பாஅன்புச்செழியன் (ஆசிரியர் - தமிழாலயம்) நன்றி கூறினார்.

ஏராளமான தமிழின உணர்வாளர்கள், அறிஞர் பெருமக்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

No comments:

Post a Comment