கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

திமுக - முஸ்லீம் லீக் பேச்சுவார்த்தை



திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.


சட்டசபை தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் ஆகியோர் 22.02.2011 அன்று அண்ணா அறிவாலயத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக சார்பில் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

முஸ்லீம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அபுபக்கர் கலந்து கொண்டனர்.


இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,


தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினோம். எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு அறிந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும். கடந்த முறை எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கினார்கள்.


வரும் 24ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நாகூரில் நடைபெறுகிறது. இதில் இயற்றப்படும் தீர்மானங்களையடுத்து வரும் 25ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் என்றார்.


No comments:

Post a Comment