கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, February 24, 2011

வள்ளுவன், தொல்காப்பியன் என்று என்னை பாராட்டுவதை நான் விரும்பவில்லை: கலைஞர்


திருவண்ணாமலை அருணை பொறியியல் கல் லூரி வளாகத்தில், தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் எ.வ.கம்பன் - கோ.கானப்பிரியா திருமணத்தை முதல்வர் கலைஞர் 23.02.2011 அன்று நடத்தி வைத்தார்.
விழாவில், மணமக்களை வாழ்த்தி, முதல்வர் கலைஞர் பேசியதாவது:
உணவு அமைச்சர் எ.வ.வேலு மகன் செல்வன் கம்பனுக்கும் மயிலாடுதுறை எஸ்.வி. கோபாலகிருஷ்ணனின் அன்பு மகள் செல்வி கானப்பிரியாவுக்கும் சீரோடும் சிறப்போடும் சீர்திருத்தத் திருமணம் சுயமரியாதை உணர்வோடு தமிழர்கள் வாழ்த்துக்களை எல்லாம் பெற்று இங்கே நடைபெற்றுள்ளது. நானும் என்னுடைய வாழ்த்துக்களை வாஞ்சையோடு தெரிவித்திட விரும்புகின்றேன்.

இந்தத் திருமணத்திற்காக நேற்று இரவே நான் வந்து விட்டேன். காரணம், முதலில் இந்த திருமண விழாவை நடத்திவிட்டு, அடுத்த திருமணம் தம்பி பிச்சாண்டி இல்லத் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் நம்முடைய தலைவர்களும் கட்சித் தோழர்களும் தங்களுடைய வாழ்த்துரைகளை மிகச் சுருக்கமாக இங்கே ஆற்றியிருக்கின்றார்கள்.

அவர்களையெல்லாம் நான் பாராட்டுகிற அதே நேரத்தில் வாழ்த்திப் பேசியவர்களைப் பற்றி ஒன்று நான் குறிப்பிட்டாக வேண்டும். இந்தத் திருமணத்தில் நான் காணுகின்ற தலைவர்களெல்லாம் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலைப் பற்றி சிந்திக்கின்ற தலைவர்களாக இருப்பதைக் காணுகின்றேன். அந்தக் காரணத்தினால் நான் இங்கே வேண்டுகோள் விடுப்பது நலமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

நம்முடைய அருமை தம்பி தமிழகத்தினுடைய உணவு அமைச்சர் பேசும்போது மிகுந்த உருக்கத்தோடு உள்ளத்திலே ஓடுகின்ற அன்பை, உணர்ச்சிகளை எல்லாம் தாங்க முடியாமல் கண் கலங்க என்னையும் என் குடும்பத்தையும் ஏன் நம்முடைய குடும்பமாம் திராவிட இயக்கத்தையும் எண்ணியவாறு பல தகவல்களை இங்கே வெளியிட்டிருக்கின்றார்.

தமிழகத்திலே மாத்திரமல்ல, பொதுவாக நாட்டில் உணவுத் துறையை நடத்துவது சாதாரணமானதல்ல. தமிழகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பில் நான் அமர வைக்கப்பட்டபோது, உணவுத் துறையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று எண்ணியபோது துவக்கத்திலே கூட இந்தத் துறையை கவனிக்கக்கூடிய உருவம் படைத்தவராக இருந்த காரணத்தினால் இப்போதும் இருக்கின்ற காரணத்தால் நான் வேடிக்கையாக அடிக்கடி அவரை “தவிசுப் பிள்ளை’’ “தவிசுப் பிள்ளை’’ என்று சொல்லுவேன். நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடாதீர்கள். அப்படிப்பட்ட உணவுத் துறையிலே எல்லாவிதமான முயற்சிகளை செய்யக்கூடிய ஊக்கத்தோடு பணிகளை ஆற்றக்கூடிய நண்பர் என்று எல்லோரும் பாராட்டும் நேரத்தில் சரி இந்தத் தம்பியே அந்தத் துறையை கவனிக்கட்டும் என்று, அந்தத் துறையை தி.மு.கழக அரசு அவரிடத்திலே ஒப்படைத்து அது சீரும் சிறப்போடும் எந்த ஏழை மக்களுக்காக, எளிய மக்களுக் காக, அன்றாடம் காய்ச்சிகளுக்காக இந்த அரசு ஆக்கப் பணிகளை ஆற்ற வேண்டும் என்று கருதியதோ, அந்தப் பணிகளை அட்டியின்றி செய்து முடிக்கின்ற அருமைத் தம்பியாக அருமை வேலு அவர்கள் இன்றைக்குத் திகழ்கிறார்கள்.

“எ.வ.வேலு’’ என்று தமிழகத்திலே உணவு அமைச்சரைத்தான் அவ்வளவு சிறப்போடும் செல்லமாகவும் அழைக்கக்கூடிய அளவிற்கு அவருடைய பெயர் இன்றைக்கு பட்டொளி வீசி பறக்கின்றது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நடைபெறும் தமிழகத்தினுடைய ஆட்சியில் என்ன சிறப்பு என்று யார் கேட்டாலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார்கள்’’ என்று சொல்கிறார்கள் என்றால், நான் இந்த ஆட்சிக்கு தலைவனாக இருந்தாலும் அதை தரக்கூடிய செயல்பாட்டை அதிலே எந்த விதமான குறைவும் ஏற்படாமல் பரிமாறித் தருகின்ற ஆற்றலும் செயல்பாடும் வேலு அவர்களுக்குத்தான் உரியது.

எனவே கிலோ அரிசி இதைப் பற்றி யாராவது பேசு வீர்களேயானால், அந்த பெருமையெல்லாம் என்னை சார்ந்தது என்று கருதுவீர்களேயானால், இவை அமைச்சரவையிலே இருக்கின்ற அருமைத் தம்பி வேலு அவர்களைத்தான் சாரும் என்று நான் திட்டவட்டமாக கூறுகின்றேன். இவ்வளவு அமைச்சர்கள் இருந்தும் வேலுவை பற்றி மட்டும் இவ்வாறு குறிப்பிடுகிறாரே என்று யாராவது கூறுவார்களே யானால் எல்லா அமைச்சர்களைப் பற்றியும் இப்படி குறிப்பிடுகின்ற காலம் வர வேண்டும், வேளை வர வேண்டும், எல்லா அமைச்சர்களும் அப்படி நான் சொல்லுகின்ற அந்த பொறுப்புள்ளவர்களாக அவர்களும் தங்களை அமைத் துக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை நான் சொல்கிறேன். இப்போது அமர்ந்திருக்கின்ற அமைச்சர்கள் மாத்திரமல்ல, ஆறாவது முறையாக ஆட்சிக்கு வரும்போதும் அப்பொழுதும் அமருகின்ற அமைச்சர்களும் இந்த ஆற்றலைப் பெற்றவர்களாக திகழ வேண்டும் என்பதுதான் என்னுடைய அளவற்ற ஆவலாகும்.

தம்பி வேலு அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். காலையிலே பத்திரிகைகளைப் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் வாழ்த்து என்ற பெயரால், வரவேற்பு என்ற பெயரால், தலைவர்களைப் பாராட்டுவது என்ற பெயரால், என்னென்னவோ விளம்பரங்களைச் செய்கிறார்கள். "ஆண்டவரே' என்கிறார்கள் "கடவுளே' என்கிறார்கள் "பரமேஸ்வரியே'' என்கிறார்கள் "எங்களைக் காக்க வந்த ஆண்டவனே'' என்றெல்லாம் கவிதைகளை இயற்றுகிறார்கள். இவைகளெல்லாம் பத்திரிகைகளிலே வருகிறது.

காலையிலே இன்றைக்கு நான் தங்கியிருந்த இடத்திற்கு தம்பி வேலு வந்தபோது ஒன்றைச் சொன்னேன் அப்போது சற்றுக் கடுமையாக அவரிடத்திலே கோபித்துக் கொண்டேன். "எல்லாம் சரி என்னை தந்தை பெரியாரின் தொண்டனே என்று வாழ்த்துங்கள் அண்ணாவின் தம்பியே என்று அழைத்து வாழ்த்துங்கள்.ஆனால், "வள்ளுவரே'' என்றும், "தொல்காப்பியனே'' என்று சொல்லி, என் மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று நான் அவரிடத்திலே சொன்னேன். அதைச் சொன்னேனா, இல்லையா என்பதை அவரிடத்திலே நீங்கள் கேட்டுப் பார்த்தால், சொல்வார்.

ஏனென்றால், ஒருவரைப் பெருமைப்படுத்துகிற அளவிற்கு என்மீது என்னதான் ஆசையிருந்தாலும், என்னதான் என்மீது அன்பு இருந்தாலும், என்னைப் பாராட்ட வேண்டுமென்று கருதினால். "பெரியாரின் தொண்டன்'' "அண்ணாவின் தம்பி'' "தொண்டர்களுக்குத் தோழன்'' "ஏழைகளுக்குத் தோழன்'' என்று சொல்லுங்கள். ஆதிதிராவிடர்களுக்கு, அனாதை மக்களுக்கு, நோயுற்ற குழந்தைகளுக்கு இன்றைக்கு இந்த அரசு ஆற்றுகின்ற பணிகளையெல்லாம் ஒன்றுபடுத்தி, அந்த நிலையிலேயிருந்து புகழுங்கள். அதை விட்டு விட்டு, "தொல்காப்பியரே'' என்றும், "வள்ளுவரே'' என்றெல்லாம் சொன்னால், அவர்களுடைய காலடிக்குக் கூட நான் சமம் அல்ல.

அவர்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தமானவன் அல்ல. எனவே, தயவு செய்து வேலு அவர்களுக்கு நான் காலையிலே சொன்ன கோபத்தோடு சொன்ன அந்த எச்சரிக்கையை நம்முடைய கழகத் தோழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திருமணத்திலே இதுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு விடுக்கின்ற செய்தியாகும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

எ.வ. வேலுவினுடைய குடும்பம் திராவிட இயக்கத்தினுடைய குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சார்ந்த கம்பன் ஆனாலும், கானப்பிரியா ஆனாலும், இருவரும் இணைந்து மணமுற்று. இருவரும் ஒருவருக்கொருவர் இணைபிரியாமல் இருக்கின்ற இதயம் பெற்று வாழ வேண்டுமென்று வாழ்த்துகிற அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களாக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவாளர் களாக ஒரு குடும்பத்தினர் இருந்தால் மாத்திரம் போதாது; அந்த விருப்பத்தை வளர்க்கின்ற இந்தக் கழகத்திற்கு பணிகளை ஆற்றுகின்ற துணிச்சலைத் தருகின்ற வகை யிலே நீங்கள் பாடுபட வேண்டும் பணியாற்ற வேண்டும். இங்கே இருக்கின்ற நம்முடைய அடிகளார் அவர்கள் மிகுந்த ஆத்திக மனப்பான்மை உள்ளவர். எ.வ. வேலு அவர்களைப் பற்றி வேறு சிலவற்றையெல்லாம் சொன் னார்கள். ஆத்திகம் நாத்திகம், இரண்டையும் இன் றைக்கு இணைக்கக்கூடிய ஆன்மீகம்தான் என்ற வகை யிலே நம்முடைய அடிகளார் அவர்கள் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறார்கள். ஆகவே, அடிகளார் எதற் காகப் பாடுபடுகிறார்? அவருடைய கருத்து என்ன? அவர் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பாடுபடுகின்றவர்களின் வரிசையிலே இருக்கின்ற ஒருவர். தமிழ்ச் சமுதாயத்தினுடைய விடுதலைக்காகப் பாடுபடுகின்ற, போராடுகின்ற ஆற்றல் பெற்றவர் அய்யா வினுடைய தொண்டராய், எனக்கு அருமைத் தம்பியாய் விளங்கக்கூடிய ஆசிரியர் வீரமணி அவர்கள். நாங்க ளெல்லாம் இன்றைக்கு ஒரே மேடையிலே அமர்ந் திருக்கிறோம் என்றால், இந்தக் குடும்பத்துச் செல்வங்கள் இவ்வளவு பேரும் ஒரே மேடையிலே வந்து வாழ்த்தினார்கள் என்ற அந்த வாழ்த்து வீண் போகாமல், எதற்காக இவர்களெல்லாம் பாடுபடுகிறார்களோ, அந்தத் தமிழ்ச் சமுதாயப் பணியை நாமும் தொடர்ந்து ஆற்றுவோம் என்ற உணர்வோடு, அவர்கள் கம்பன் ஆனாலும், கானப்பிரியா ஆனாலும், இவர்களை வாழ்க்கைக்காக வேராக இருந்து பாதுகாக்கக்கூடிய வேலு அவர்கள் ஆனாலும், வேலுவினுடைய துணை வியார் அவர்கள் ஆனாலும், அனைவரும் திராவிட இயக்கத்தினுடைய கருத்தாழத்தைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும் மற்றவர்களையும்

வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தம்பி வேலு அவர்களுக்கு ஒன்றைச் சொல்வேன். உணர்ச்சிவசப்பட்டு இங்கே தாங்கள் கொட்டிய அந்த வார்த்தையை, ஒரு அண்ணன் பால், தம்பிக்கு உள்ள பற்றுதலை, பாசத்தை வெளிப் படுத்தக் கூடியது. இந்தப் பற்றுதலும், பாசமும் என் றைக்கும் இருந்திட வேண்டுமென்ற என்னுடைய விழைவைத் தெரிவித்து, "வேலு வாழ்க வேலுவினுடைய குடும்பம் வாழ்க இந்தக் குடும்பத்தினர் நம்முடைய கழகக் கொடியின் நிழலில் நின்று, என்றென்றும் பெரியார், அண்ணா இவர்கள் போதித்த கொள்கைகளைப் பரப்பிடுக'' என்று கேட்டுக் கொண்டு, மணமக்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.

எனக்கு மாத்திரம் புரியும்படியாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ : கலைஞர்

இந்தத் திருமணத்தில் நான் காணுகின்ற தலைவர்களெல்லாம் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலைப் பற்றி சிந்திக்கின்ற தலைவர்களாக இருப்பதைக் காணுகின்றேன். நம்முடைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் பேசும்போது தேர்தல் உடன்பாட்டில் தன்னுடைய பங்கு என்ன என்பதை விளித்துரைக்காமல் எனக்கு மாத்திரம் புரியும்படியாக “பதினாறும்’’ பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று சொன்னார்கள்.


பதினாறு என்றால் ஐஸ்வர்யங்கள் என்று இங்கே குறிப்பிட்டார். ரவிக்குமார் படித்தவர், நிறைய புரிந்தவர். அவர் இங்கு “பதினாறு பெற்று’’ என்ற பெயருக்கு “பதினாறு பேறுகள்’’ என்ற பொருளைப் புரிந்து கொள்ளாமல் “பதினாறு பிள்ளைகள்’’ என்று சொல்வார்களே, அந்த எண்ணத்தில் அவர் குறிப்பிட்டதாகக் கருதுகின்றேன்.


ஆனால் காலப்போக்கில் இப்போது அதிகமாக பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்ற வழக்கு இல்லை. குறைவாகத்தான் குழந்தைகளைப் பெற வேண்டும் என்று விஞ்ஞான ரீதியாக அரசு ஆணையாகவே ஆணையிடுகின்ற காலக் கட்டம் இது.


ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம் இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம் என்று இருப்பதை தம்பி ரவிக்குமார் அவர்கள் ஏன் மறந்து விட்டார் என்பது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். தம்பி இதனை ஆழமாக பதிய வைத்துக்கொண்டு செயல்படுவார் என்று நம்புகின்றேன் என்றார்.


முன்னதாக, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். விழாவில், முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.க.தலைவர் கி.வீரமணி, பா.ம.க தலைவர் கோ.க.மணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முரசொலி செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், எம்.பி, கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment