கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 19, 2011

தொகுதிகள்பற்றி ஆலோசனை - கலைஞருடன் காங்கிரஸ் குழு சந்திப்பு


மே மாதம் நடைபெற இருக்கும் தமிழகசட்டசபை தேர்தலைசந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

காங்கிரஸ் அய்வர் குழு இந்த தேர்தலில், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியுடன் தொகுதி பங்கீடு சம்பந்தாக பேசுவதற்காக, தமிழக காங்கிரஸ் சார்பில்5 பேர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, ஜெயக் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.

இந்த குழுவினர், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிருவாகிகளுடன் கருத் துக்களை கேட்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 13.02.2011 அன்று நடை பெற்றது. எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகி கள் தனித்தனியாக அய்வர் குழுவினரை சந்தித்து பேசினார்கள்.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி? காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து தங்கள் கருத்துகளை அவர்கள் எடுத்துக் கூறினார் கள். ஆலோசனை கூட்டம் முடிவடைந்ததும், நேற்று மாலை 4.30 மணிக்கு அய்வர் குழுவினர் கோபால புரம் சென்று முதல் அமைச்சர் அவர்களை சந்தித்து பேசினார்கள். 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்புக்குப்பின் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

எங்கள் கூட்டணியின் தலைவர் என்ற முறையில், மரியாதை நிமித்தமாக முதல் அமைச்சர் கலைஞரை சந்தித்து பேசினோம். தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள் மற்றும் நிருவாகிகளுடன் 13.02.2011 அன்று முதல் கருத்து கேட்டு வருகிறோம்.

இந்தக் கூட்டம், திங்கள்கிழமையும் (14.02.2011) நடைபெறும். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தொகுதி பங்கீடு குறித்து எதுவும் சொல்ல முடியும், இவ்வாறு தங்கபாலு கூறினார்.

பேட்டியின் போது அய்வர் குழுவை சேர்ந்த ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment