பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மகள் திருமணம் 13.02.2011 அன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். துணை முதல்வரின் வருகையையொட்டி வேப்பூரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டர்களிடம் சால்வைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
அப்போது ஒரு தொண்டர் ஒரு வெள்ளைத்தாளை மடித்து கொடுத்துள்ளார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், அந்த வெள்ளைத்தாளை பிரித்து படித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அதில், ஒரு நிமிடம் பேசவும் என்றும், ஒரு செல்போன் எண்ணும் எழுதியிருந்தது.
உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின், நான் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்றதும், சற்றும் எதிர்பாராத அந்த திமுக தொண்டர் வார்த்தைகள் வராமல் கதறி அழுதார்.
பின்னர் தான் ஒரு திமுக தொண்டர் என்றும், தன்னுடைய பெயர் பொன்முடி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
உங்கள் கோரிக்கையை நிதானமாக கூறுங்கள் என்ற துணை முதல்வர் ஸ்டாலினிடம், தான் இருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிராமத்திற்கு தாங்கள் கொடியேற்ற வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனை பொறுமையுடன் கேட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக நேரம் ஒதுக்கி இருமாத்தூர் கிராமத்திற்கு கழக கொடி ஏற்ற வருகிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்றார். சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி. நன்றி : நக்கீரன்.
No comments:
Post a Comment