கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, February 13, 2011

பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் - முதல்வர் கருணாநிதி 17ல் திறக்கிறார்



பேராயர் கால்டுவெல் நினைவு இல்லத்தை முதல்வர் கருணாந¤தி வரும் 17ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்தியா வந்த பேராயர் கால்டுவெல், தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்டு, நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தங்கியிருந்தார். அப்போது, அவர் தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதினார். அவரது தமிழ்பற்றை போற்றும் வகையில், பேராயர் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி பேராயர் கால்டுவெல் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டார்.
பின்னர், பொதுப்பணித்துறை மூலம் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் இல்லத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் கால்டுவெல் நினைவு இல்லம் உள்ளது.
வரும் 17ம் தேதி முதல்வர் கருணாநிதி, சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் கால்டுவெல் நினைவு இல்லத்தை திறந்து வைக்கிறார். இதை முன்னிட்டு அன்று மாலை 5.30 மணிக்கு இடையன்குடியில் நடக்கும் விழாவுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார்.
விழாவில், அமைச்சர்கள் பரிதி இளம¢வழுதி, மைதீன்கான், பொன்முடி, எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கலெக்டர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment