கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 19, 2011

தொகுதிகள் முக்கியம் அல்ல எந்த பக்கமும் சாயாமல் தி.மு.க. கூட்டணியில் தொடருவோம் தொல்.திருமாவளவன் எம்.பி. பேச்சு


எத் தனை தொகுதி கிடைக் கும் என தெரியாவிட் டாலும் தி.மு.க. கூட்ட ணியில் தொடருவோம் என்று தொல். திருமா வளவன் பேசினார்.

பெரம்பலூரில் நடைபெற்ற தமிழக வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜ் இல்லத் திருமண விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பேசிய தாவது:

சாயும் சிறுத்தைகள் என சிலர் எழுதுகி றார்கள், பேசுகிறார்கள். திருமாவளவனுக்கு முதுகெலும்பு முறிந்து விடவில்லை. எனவே நான் எந்த பக்கமும் சாயமாட்டேன். அதையே மீண்டும் சொல்கிறேன். எதுவாக இருந்தாலும் தி.மு.க. கூட்டணியில் தான் தொடருவேன். 1999ஆம் ஆண்டு அரசியல் இயக் கமாக அடியெடுத்து வைத்தோம். இந்த 11 ஆண்டுகளில் 8 ஆண்டு கள் தி.மு.க.-வுடன்தான் களத்தில் இருந்திருக் கிறோம். இடையில் 2 ஆண்டுகள்தான் இந்த அணியை விட்டு விலகும் சூழ்நிலை ஏற் பட்டது. திராவிட முன் னேற்ற கழகம் விடுதலை சிறுத்தைகள் உறவு என்பது தேர்தல் சீட்டுக் கான உறவல்ல. கொள்கை அடிப்படை யிலான உறவாகும். வெறும் சீட்டுக்காக வெற்றி தோல்விக்காக ஊசலாட்ட உறவு வைத்து இருப்ப வர்கள் அல்லர், விடு தலை சிறுத் தைகள்.

விடுதலை சிறுத்தை கள் கேட்டதை எல்லாம் அள்ளி வழங்கி இருக் கிறார் தமிழக முதல் அமைச்சர் கலைஞர். ஸ்பெக்ட்ரம் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு தி.மு.க. கூட்ட ணியை வீழ்த்தி விடலாம் என சிலர் நினைக்கிறார் கள். அது நடக்காது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்கு வங்கி உள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. தி.மு.க கூட்ட ணியில் எங்களுக்கு எத்தனை சீட் தரப்படும் என தெரியாது. எந் தெந்த தொகுதிகள் என அடையாளம் தெரி யாது. கூட்டணி பற்றி பேரம் பேசவும் நாங்கள் விரும்பவில்லை.

இவ்வாறு தொல். திருமாவளவன் எம்.பி. பேசினார்.

No comments:

Post a Comment