தமிழ் இணையக் கல்விக் கழகம் பிற பல்கலைக்கழகங்கள் போல் முழுமையான பல்கலைக் கழகமாக நிலை உயர்த்தப்படும் என, முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
1999ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் சென்னை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் அறிவிக்கப்பட்டதற்கேற்பத் முதலமைச்சர் கலைஞர் 17.2.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக் கழகம் (Tamil Virtual University) எனும் இணையக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்நிறுவனம், தமிழ் இணையக் கல்விக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
உலகெங்குமுள்ள மக்களுக்குத் தமிழ் பயிலும் வாய்ப்பை அளிக்கும் இந்தத் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஒருங்கிணைந்த தமிழ் இளநிலைப் பட்டப் படிப்பினை இணையதளம் வாயிலாக வழங்கி வருகிறது. மேலும், இக்கல்விக் கழகம் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பிற்கான பாடங்களையும் ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment