கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 22, 2011

இல.கணேசன் பிறந்தநாளுக்கு கலைஞர் நேரில் வாழ்த்து



பாஜக தமிழக முன்னாள் தலைவர் இல.கணேசனை முதல்வர் கருணாநிதி நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக தமிழக முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனின் 66வது பிறந்தநாள் விழா 16.02.2011 அன்று கொண்டாடப்பட்டது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள இல.கணேசன் வீட்டிற்கு முதல்வர் கருணாநிதி நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் இருவேறு துருவங்களாக இருந்தாலும், நட்பு பாராட்ட முடியும் என்ற அடிப்படையில் முதல்வர் கருணாநிதி என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமையாக இருக்கிறது.


அப்போது தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment