கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, February 25, 2011

ஆதிதிராவிடர் பட்டியலில் தலித் கிறிஸ்தவர்கள்: பிரதமருக்கு கலைஞர் கடிதம்



தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்,


கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 2.4.010 ல் உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே 25.10.1996, 7.8.2006 ஆகிய தேதிகளிலும் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். தமிழக அரசு இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இன்னும் மத்திய அரசால் முறையான அனுமதி வரவில்லை.

தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் சட்டம் 1950, அடுத்து 1956 ல் வந்த சட்ட மாறுதல், 1976 ல் வந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சட்ட திருத்தம் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோரை மத ரீதியாக வித்தியாசம் பார்க்க கூடாது என்று உள்ளது. சீக்கிய கிறிஸ்தவர்களும், புத்தமத கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர்.

எந்த மதத்தில் இருந்தாலும் அனைத்து தாழ்த்தப்பட்டவர்களும் சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ளனர். எனவே அவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உறுதி அளித்து உள்ளது. 6 1 2011 ல் சட்டசபை கவர்னர் உரையிலும் கிறிஸ்தவ மதத்துக்கு மாநில ஆதி திராவிடர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

21 2 2011 ல் நடந்த உங்கள் (பிரதமர்) தலைமையில் நடந்த மந்திரி சபை அரசியல் விவகார கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. எனவே நீங்கள் இதில் தலையிட்டு ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உரிய சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வந்து அரசின் சட்டத்தில் சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்பாடு: கலைஞர்

தமிழகத்தின் பொது மொழியான தமிழையே பள்ளிகளில் படிக்காமல்; மாணவர்கள் கல்லூரி கல்வி கற்றுப் பட்டதாரிகளாக வெளிவரும் நிலையினைத் தவிர்த்திட வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன்; தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.


இதன் காரணமாக, உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டு, தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழிவழிச் சிறுபான்மையினர் (டுண்பேரளைவண்உ ஆண்ய்டிசவைநைள), தமது பிள்ளைகள் தமது தாய் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லை என்று முறையீடு செய்ததன் அடிப்படையில், மொழிவழிச் சிறுபான்மையினர் தமது தாய்மொழியை ஒரு பாடமாக கூடுதலாகப் படித்துக் கொள்ளலாம் என்றும்; அதில் தேர்ச்சி பெறுவதற்குக் குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றும்; முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.


இப்படி குறைந்தபட்ச மதிப்பெண் தேவையில்லை என்றால்; மொழிவழிச் சிறுபான்மை மாணவர்கள் தமது தாய்மொழியைப் படிப்பதில் தேவையான கவனம் செலுத்த மாட்டார்கள் என்றும்; எனவே, இதை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் மொழிவழிச் சிறுபான்மையினர் சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்தக் கோரிக்கை நன்கு பரிசீலிக்கப்பட்டது. மொழிவழிச் சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கற்பதோடு, கூடுதலாக உருது, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தமது தாய்மொழியையும் ஒரு பாடமாகக் கற்க வேண்டும் என்றும்; அதில் தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ்ப் பாடத்திற்கு நிர்ணயித்திருப்பதைப் போல குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும்; முதலமைச்சர் கலைஞர் இன்று (25.2.2011) அறிவித்துள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் அடையும் வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை உயர்வு: கலைஞர்

வழக்கறிஞர்கள் பேரவை உறுப்பினராக இருந்து, இறந்து போகும் வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 2 இலட்சம் ரூபாய் உதவித் தொகை 5 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க என, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.


தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தின் கீழ், வழக்கறிஞர்கள் நல நிதிக்கு தமிழக அரசின் ஒருமுறை மானியமாக 2 கோடி ரூபாய் நிதி வழங்கி ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது, இத்திட்டத்தின்கீழ் உறுப்பினராக இருந்து, இறந்து போகும் வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 2 இலட்சம் ரூபாயிலிருந்து, 5 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டுமென்று சென்னை மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் பேரவை அளித்த கோரிக்கை ஏற்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார்.


அந்த அறிவிப்பினை செயல்படுத்தும்முகத்தான், வழக்கறிஞர்களாக பணியாற்றி வழக்கறிஞர்கள் பேரவையில் உறுப்பினராக இருந்து, இறந்து போகும் வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 2 இலட்சம் ரூபாய் உதவித் தொகையை, அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப, 5 இலட்சம் ரூபாய் வரை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.


இத்திட்டத்திற்காக வழக்கறிஞர்கள் நல நிதிக்கு ஆண்டொன்றுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் தொகையோ
அல்லது ஆண்டொன்றுக்கு 2 கோடியே 50 இலட்சம் ரூபாயோ இதில் எது குறைவோ அத்தொகையை தமிழக அரசின் மானியமாக இந்நல நிதிக்கு வழங்கவும் முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு : கலைஞர்

மீன்பிடித் தடை காலங்களில் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை 800 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக கடலோர மாவட்டங்களில் ஆண்டுதோறும் இனப்பெருக்க காலத்தில் 45 நாட்களுக்கு கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இத்தடையினால் பாதிக்கப்படும் மீனவர் குடும்பங்களின் நலன் கருதி முதல்வர் கருணாநிதி, மீனவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதல் முறையாக 2008 ஆம் ஆண்டில் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கிட ஆணையிட்டார். 2010 ஆம் ஆண்டில் இந்த உதவித் தொகை 500 ரூபாய் என்பதை 800 ரூபாய் என உயர்த்தி முதல்வர் ஆணையிட்டார்.


இந்நிலையில், இந்த உதவித் தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டுமென மீனவர்கள் அளித்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதல்வர் கருணாநிதி 2011ஆம் ஆண்டு முதல் மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கிட ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மணக்குடியில் தனியார் மூலம் புதிதாக மீன்பிடித் துறைமுகம்: கலைஞர்

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் தனியார் மூலம் புதிதாக மீன்பிடித் துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் மேதகு ஆயர் பீட்டர் ரெம்ஜியஸ் அவர்கள் 15.9.2010 அன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து குமரி மாவட்டம் மணக்குடியில் தனியார் பங்களிப்போடு மீன்பிடித் துறைமுகம் ஒன்றை அமைத்திட அனுமதி கோரினார்.

இந்தக் கோரிக்கையை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்த தமிழக அரசு, குமரி மாவட்டம் மணக்குடி பகுதி வாழ் மீனவ மக்களின் நலன் கருதி, மணக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. இதற்காக மைய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகள் பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் கட்டி, சொந்தமாக்கி, பராமரித்து மாற்றும் முறையில் மீன்பிடித் துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி இன்று (25 2 2011) அறிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment