கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 26, 2011

2 நாளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை: கலைஞர்


தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய முஸ்லீம் லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 20ஆம் தேதி ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமைக் கழகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை (25.02.2011) இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரஸ் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் நிகழ்வுகளை எங்களது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். எங்களுடைய தலைமைக்கு தெரிவித்த பிறகு, மீண்டும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றார்.

அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரசுடன் பேச்சு 3வது கட்டத்துக்கு முன்னேறியுள்ளது. பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. 3வது கட்ட பேச்சு 2 நாளில் நடக்கும்.
கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் வலியுறுத்துவதாக கூறப்படுவது கற்பனை. பேச்சில் திமுக என்ன தெரிவித்துள்ளது என்பது ரகசியம். காங்கிரஸ் எத்தனை தொகுதி கேட்கிறது என்பதை இப்போது கூற முடியாது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
No comments:

Post a Comment