கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 21, 2011

சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு தி.மு.க.-காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி பேட்டி


தமிழக சட்டசபைக்கு 2011 -மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளி யாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேர் தலில் கூட்டணி அமைத்து போட்டியி டுவதிலும் தொகுதி பங் கீடு குறித்து பேச்சு நடத் துவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க. கூட்டணி யில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளன. இந்த கூட்ட ணி யில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கி உடன்பாடு ஏற்பட்டுள் ளது. தி.மு.க. கூட்டணி யில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக காங்கிரஸ் விளங்கு கிறது. தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்து வதற்காக அமைக்கப் பட்டுள்ள காங்கிரஸ் அய்வர் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம் பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங் கிரஸ் செய்தித் தொடர் பாளர் ஜெயந்திநடரா ஜன் எம்.பி., தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, ஜெயக் குமார் எம்.எல்.ஏ. ஆகி யோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த அய்வர் குழு கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் நிரு வாகிகளிடம் கருத்துக் களை கேட்டு அறிந்தது. அப்போது தி.மு.க. விடம் எத்தனை தொகு திகளை கேட்டுப் பெற வேண்டும் என்று விவா தித்தது. அதன் பிறகு அய்வர் குழுவினர் டில்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர் களை சந்தித்து பேசினர்.

மு.க. ஸ்டாலின்

இதன் தொடர்ச்சி யாக காங்கிரஸ் அய்வர் குழுவினர், தி.மு.க. குழு வினருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற் காக 20.02.2011 அன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்களை துணை முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

தி.மு.க. தொகுதி பங் கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச் சர்கள் ஆர்க்காடு வீரா சாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர். பாலு ஆகியோர் காங் கிரஸ் அய்வர் குழுவின ருடன் தனி அறையில் உட்கார்ந்து பேசினர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட் டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதி கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 35 தொகுதி களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று அய்வர் குழு வினர் எடுத்துக் கூறிய தாக தெரிகிறது. தி.மு.க. குழுவினர் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறியதாக தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணிநேரம் நடை பெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், துணை முதல்-அமைச் சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறிய போது, "பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண் டிருக்கிறது என்றும் பேச்சுவார்த்தை குறித்து இரண்டு தலைவர்களுக் கும் எடுத்துக் கூறு வோம் என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும்'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

அதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்க பாலு செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டு குழுவும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப் பட்ட குழுவினரும் சந்தித்து பேசினோம். இரண்டு கட்சிகளில் உள்ள நிலைப்பாடு குறித்து விரிவாக பேசி னோம். பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக அமைந் தது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக பேச இருக்கிறோம்.

இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் பேசி முடிப்போம். அப் போது நல்ல செய்தி களை உங்களுக்கு சொல்வோம். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி, வெற்றிக்கூட்டணி.

இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment