பெரம்பலூர் உழவர் சந்தை திடலில் 13.02.2011 அன்று பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் துரைசாமியின் மகள் திருமணத்தை துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் மணவிழாவில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,
ஐந்தாம் முறையாக முதல் அமைச்சராக கலைஞர் பொறுப்பு ஏற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நான் பெரம்பலூருக்கு வந்து இருக்கிறேன். 2007 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைக்கல்லூரி திறந்து வைக்கவும், 2008 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விழாவுக்காகவும், 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கவும், 2010 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன்.
இப்போது 2011ம் ஆண்டு மாவட்ட செயலாளர் மகள் திருமணத்தை நடத்தி வைக்க மட்டும் அல்லாமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன். இன்னும் தேர்தலை ஒட்டி பிரசாரத்துக்காக வருவேன். அதன் பின்னர் 6 வது முறையாக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்னர் மீண்டும் அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக 2012 ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிலர் திட்டமிட்டு சதி செய்து ராசாவை மட்டும் அல்ல இந்த இயக்கத்தையே அழிக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து இருக்கிறார்களே தவிர தி.மு.க அழிந்ததாக வரலாறு இல்லை. இது தான் இந்த இயக்கத்தின் வரலாறு ஆகும் என்றார்.
No comments:
Post a Comment