கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 12, 2011

சு.சாமியே, ஓடாதே, நில்! யார் இந்த சு.சாமி?


மானமிகு கலைஞர்மீது ஏன் இவர் எகிறிக் குதிக்கிறார்-விழுந்து பிராண்டுகிறார்?

மாவீரன் பிரபாகரன் பற்றி பறையன் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினார்?
ஆ.இராசா மீது ஏன் இவ்வளவுத் தூஷணைகள்?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறார்?
ராமனுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறார்?

ராமன்தான் பெரியவன் - மக்கள் நலன் பேணும் சேது சமுத்திரத் திட்டம் முக்கியம் அல்ல என்று ஏன் கருதுகிறார்?

சிதம்பரம் கோயில் தீட்சதர் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு வரும் நிலையில், அதனை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர் களோடு சேர்ந்து வழக்கில் தம்மை இணைத்துக் கொள்ளத் துடியாய்த் துடிப்பானேன்?

ஜெயலலிதாவுக்கு வாடகை வாயாக ஒலிப்பானேன்? இந்தப் பேர் வழியின் பக்கத்தில் ஈ, காக்கை உண்டா?

இந்தத் தனி மனிதன் வெட்ட வெளியில் சிலம்பாட்டம் ஆடுவதை நாட்டு ஊடகங்கள் தூக்கிச் சுமப்பது ஏன்?

இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஒரு மண்டலம் விரதம் பூணவேண்டியதில்லை. மண்டையை உலுக்கிக் கொண்டு சிந்திக்கவும் தேவையில்லை.
மிக எளிதான பதில், மிக மிக எளிதான விடை என்ன தெரியுமா? இந்தப் பேர் வழி ஒரு பச்சைப் பார்ப்பனர் என்பதால்தான் இவ்வளவுப் பெரிய தடபுடல்!

ஆசாமி அடாடிவடித்தனமாகப் பேசக் கூடியவர் என்பதால் இவ்வளவுப் பெரிய விளம்பரம்.
அடிப்படையில் பார்ப்பனர் என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதைப் புரிந்துகொண்டால் இவருடைய சேட்டைகளுக்கான காரணம் சாங் கோபாங்கோமாக பஷ்டமாக பளிச்சென்று புரிந்து விடும்.

இதோ ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: எனக்கு முன்னாள் இருந்த அமைச் சர்கள் என்ன ஃபார்முலாவைக் கடைப்பிடித் தார்களோ, அதையேதான் நான் கடைப்பிடித்தேன். நான் குற்றமற்றவன் என்று ராசா திரும்பத் திரும்ப கூறுகிறாரே?

சு.சாமி: ராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. ராசா தவறு செய்துள்ளார். அதனால் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்.

(குமுதம் ரிப்போட்டர் 5.12.2010 பக்கம் 43)

இராசாவுக்கு முன்பு இருந்த பா.ஜ.க., அமைச் சர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்குத் தேவையில்லையாம், ஏன் தேவையில்லை?
விளக்கம் அளித்தாரா?

விவாதம் புரிந்தாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் கிடையாது.

பா.ஜ.க. அமைச்சர் தவறு செய்தால் அதைப்பற்றி அவருக்குக் கவலையில்லையாம்!
இராசா தவறு செய்தாராம், அதைப் பற்றி மட்டும்தான் பேசுவாராம்.

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமைச்சர்கள் என்றால் பார்ப்பனர்கள் அவர்களைப் பற்றிப் பேசுவார்களா?

பாரதீய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனீயத்தைப் பதியம் போட்டு வளர்க்கும் கட்சியாயிற்றே. அதன்மீது தூசு விழலாமா? அப்படி விழுந்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளத்தான் இவர்களால் முடியுமா?

அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ். காரர் இவர் என்று எழுதுவது ஏனோ தானோ என்ற முறையில் அல்ல. அவரே வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதுவும் எந்த இதழில்? அவாளின் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதத்தில் (ஏப்ரல் 14, 2006)

ஈரோட்டில் நடந்த வி.இ.பரிஷத் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல்வாதி நீங்கள்?

அரசியல்வாதியாக நான் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. ஒரு இந்து என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் கலந்துகொண் டேன். நான் வி.இ.பரிஷத் மேடைகளில் பேசுவது புதிது அல்ல. காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு கடந்த 2ஆண்டுகளில் 20-க்கும் அதிகமான வி.இ.பரிஷத் மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன்.

ஆர்.எஸ்.எஸ். பற்றி உங்கள் அபிப்ராயம்?

நான் தீனதயாள் ஆராய்ச்சிக் கழகத்தில் துணைத் தலைவராக இருந்திருக்கிறேன். ஆர்கனைசர் வார இதழில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். இப்போது மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. நாட்டில் இந்து மனப்பான்மையை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். முக்கியப் பங்காற்றி வருகிறது. (விஜயபாரதம், 14.4.2006)

இந்தப் பேட்டி பற்றி விளக்கவா வேண்டும்-விளக்கம் தேவையா இந்த பேட்டிக்கு?

பெயர் - ஜனதா கட்சியின் தலைவர்- ஆனால் அவர் அடிப்படை உணர்வு என்பதோ ஆர்.எஸ்.எஸ். விசுவ ஹிந்து பரிசத் உள்ளிட்ட சங்பரிவார் பக்கம்.

இப்படிப்பட்டவர் எப்படிப் பேசுவார்? எப்படி நடந்து கொள்வார்? அப்படியே பேசுகிறார்- அப்படியே நடந்து கொள்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைதுக்குப் பிறகு அவர் மீது ஆர்வம் பீறிட்டுக் கிளம்பிவிட்டதாம். 2 ஆண்டுகளில் 20 விசுவஹிந்து பரிஷத் கூட்டங்களில் கலந்துகொண்டு முழங்கி இருக்கிறார்.

ஜெயேந்திரர் கைதுக்குக் காரணம் சோனியா வாம்-ஜெயலலிதா இல்லையாம். சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்தாராம் ஜெயலலிதா (ஜெயலலிதாவுக்கே உபயம்!).

சோனியாவின் நட்பைப் பெறுவதற்காக எதற்காக ஜெயேந்திரரைக் கைது செய்ய வேண்டு மாம்? அப்படி எல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்கக்கூடாது. கேட்டால் நான் யார் தெரியுமா, ஹார்வேடு பல்கலைக் கழகத்தில் பாடம் நடத்துபவன் என்று தலைக்கனத்துடன் பேசுவார்.

அமர்த்தியா சென்னுக்கும் நோபல் பரிசு கிடைத்ததே, கிறிஸ்துவ சதி என்று சொன்ன கூட்டம் அல்லவா. அதே ஆர்.எஸ்.எஸ். பாணியில் ஜெயேந்திரரைக் கைது செய்ததற்கும் காரணம் சோனியா காந்தியாம்.

அப்படி யென்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சங்கரராமன் கொலையே செய்யப்பட வில்லை - கொலை செய்யப்பட்டதாக சொல்வது எல்லாம் சோனியாவின் பிரச்சாரத் தந்திரம் என்று சொல்லுவதற்குக் கூட கூச்சப்படாத ஜென்மம் இது! இவ்வளவுக்கும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந் திர சரஸ்வதி மீதான குற்றம் சாதாரணமானதா?

இ.பி.கோ. 302, 120-பி, 34, 201 கொலை செய்யத் தூண்டுவது, கூட்டுச்சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை முதலியவை-இவையெல்லாம் குற்றம் இல்லையாம்!

இந்தக் குற்றவாளிக்காக பூணூலை முறுக்கிக் கொண்டு வக்காலத்து வாங்குவாராம்; 20 கூட்டங்களில் பேசினாராம். ஆனால் வெறும் யூகத்தின் அடிப்படையில் ஆ.ராசாவைக் குற்றம் சுமத்தும் விடயத்தில் விண்ணுக்குத் தாவிப் பேசுவாராம். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம்! பூணூல் வாதம் என்பது!

கல்லூரியில் படிக்கும்போதே ஆர்.எஸ்.ஸோடு தொடர்பு- ஜனசங்கத்தில் சங்கமம்- குருஜி கோல்வால்கரோடு குசலம். இந்தப் பின்னணி களைத் தெரிந்துகொண்டால் இந்த சு.சாமி பார்ப்பனரின் சூட்சமங்களும், சிண்டு முடியும் நரித்தனங்களும், நஞ்சு தோய்ந்த நாக்கின் நயவஞ்சகங்களும், பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் புரட்டுகளும் எங்கிருந்து கிடைத்தன என்னும் விவரங்கள் விவரமாகவே தெரியும்.

முடிந்துவிடவில்லை, இன்னும் இருக்கிறது.

விகடகவி, அக்கப்போர் ஆசாமி, அகாசுகா ஆளு, டுப்பாக்கூர் பேர்வழி, கோமாளிராயன், விளம்பரப் பிரியன்-என்று நாட்டு மக்களால் பட்டம் சூட்டப்பட்ட அக்கிரகார அபிஷ்டுதான் இந்தச் சு.சாமி! கிறுக்கராக இருந்தாலும், அல்லது கிறுக்கர் போல பாவனை பண்ணினாலும் தான் ஓர் அக்கிரகார அம்பி என்பதில் மட்டும் கில்லாடிதான்!

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா யிருக்கும் ஜாலக்காரர்தான்.

தமிழர்களில் முன்னணியாக இருக்கக் கூடியவர் மீது திடீரென்று வெடிகுண்டைத் தூக்கிப் போடுவார்.

செல்வாக்கானவர்கள் பற்றி விமர்சனம் செய்தால் செங்கல்லுக்குக்கூட விளம்பரம் கிடைக்குமே!. அந்தக் கலையைக் கற்ற கெட்டிக்காரர்!

தி.மு.க., - பா.ம.க., பிரச்சினை ஒரு புறமிருக்க, ராஜீவ் காந்தி படுகொலையில், வெளிநாட்டுச் சதிவலை தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.அய். யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளது.

இந்த கே.பத்மநாபன் வேறு யாருமல்ல; சர்வதேச நிதி நிருவாகப் பொறுப்பாளர். கே.பி. என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்கமுடியாத நபர்!

இப்படிப்பட்ட கே.பி.யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். தாய்லாந்து சென்று கே.பி.யை டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் சந்தித்துப் பேசினார்கள். ராமதாசையும், திருமாவள வனையும் சி.பி.அய். விசாரிக்க வேண்டும் என்றார் சு.சாமி. ( குமுதம் ரிப்போர்ட்டர் 22-6-2008 - பக்கம் 10).

இதுபற்றி மானமிகு திருமாவளவனிடம் கேட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி ஓர் அகாசுகா பேர்வழி என்பதை அவ்வப்போது இப்படித்தான் காட்டிக் கொள்கிறார் என்று முகத்தில் அறைந்தது போல பதில் கூறினார். அந்தத் தகவல் முற்றிலும் பொய் என்று முகத்திரையைக் கிழித்தார். (அதே குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்).

அதெல்லாம் எங்கே உறைக்கப் போகிறது உளுத்துப் போன பேர்வழிக்கு?

ஆதாயம் பெறுவதற்கு அவ்வப்போது சிலருக்கு வலையை வீசுவார் - அவர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளுவார். அப்படித்தானே ஒருமுறை மதுரைத் தொகுதி எம்பியானார்.

திடீர்னு டீ பார்ட்டிக்கு அழைப்பார். அதில் கண்டிப்பாக வில்லங்கம் இருக்கும்.

அ.தி.மு.க.வின் ஆதரவோடு இரண்டாவது முறை யாகப் பிரதமராகியிருந்தார் வாஜ்பாய். அப்போது முன்னாள் கடற்படைத் தலைவர் விஷ்ணு பகவத் சுமத்திய குற்றச்சாற்றுகளின்படி, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டசை, இலாகா மாற்றம் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார் ஜெயலலிதா.

ஆனால் அதற்கு வாஜ்பாய் செவிசாய்க்காததால், ஜெயலலிதா ஆதரவை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். அப்பொழுதுதான் இந்த சு.சுவாமி குறுக்கே புகுந்து டீ பார்ட்டி நடத்தி அதில் பா.ஜ.க. அல்லாத தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த டீ பார்ட்டிக்குப் பிறகே வாஜ்பாய் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கினார். ஆட்சியும் கவிழ்ந்தது. அத்தனையும் சுவாமி புண்ணியம்.

உண்மையில் ஃபெர்னாண்டசை இலாகா மாற்றுவது மட்டுமே ஜெயலலிதாவின் கோரிக்கை அல்ல; மதுரை தொகுதி எம்.பி.யான சுவாமியை நிதியமைச்சராக்க வேண்டும் என்பதுதான். இது முழுமையாக நடக்கா விட்டாலும் வாஜ்பாய் அரசு கவிழ்ந்ததில் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் பரம திருப்தி!

(கல்கி 6-4-2008 பக்கம் 47)

எழுதி இருப்பது விடுதலை ஏடு அல்ல; முர சொலியும் அல்ல. நக்கீரனும் அல்ல. அவாள் ஆத்துக் கல்கிதான் இப்படி உண்மையைக் கக்கியுள்ளது.

பதவிக்காக எந்தப் பித்தலாட்டத்தையும் செய்ய கிஞ்சிற்றும் தயங்காத தரகர் என்பதை கல்கியே கணித்து விட்டதே. அதற்கு மேல் ஆதாரம் எதற்குக் குதம்பாய்? என்று பாடவேண்டியதுதான்.

மதுரைப் பதிப்பு தினத்தந்தியில் (8-10-2001) ஒரு செய்தி வெளியாகியிருந்தது. பெங்களூரில் அல்சூர் சென்னில்ஸ்ட்ன் சாலையில் நீச்சல் குளத்துடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடத்தை 1994 இல் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு சு.சுவாமி வாங்கியிருந்தார். அதனுடைய இப்போதைய (1996) மதிப்பு ரூ 60 லட்சம். ஆனால் ரூபாய் 14 லட்சம் 50 ஆயிரத்துக்கு விற்றதாகக் கூறுகிறார்.

பத்திரப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று அ.இ.அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி பெங்களூர் 10 ஆவது கூடுதல் மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தாரே!

இதில் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஒன்று அரங்கேறியிருக்கிறது - அதுதான் முக்கியம்.
இந்த வீட்டை வாங்கியவர் ஆலன் பிண்டோ. அவர் பெயரில்தான் விற்பனைப் பத்திரமும் தயாரிக்கப்பட்டது.

பிண்டோவுக்குக் குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அந்தக் குழந்தை சார்பிலும் முன் பணம் கொடுத்துள்ளதாக விற்பனைப் பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபார்ட்மென்டை பிரித்து விற்கப்பட முடியாத நிலையில் மூன்று பேருக்கு விற்றதாகக் குறைந்த மதிப்புகளைக் காட்டி அரசுக்குச் சேரவேண்டிய முத்திரைப் பணம் கிடைக்க விடாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்யப் பட்ட மூவரில் ஒருவர் யார் தெரியுமா? பிறக்காத - தாயின் வயிற்றுக்குள் இருக்கும் சிசு.

இப்படிப்பட்ட கில்லாடியை இதுவரை யாரும் கேள்விப்பட்டு இருக்கிறோமா?

இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடு மதுரைப் பதிப்பு தினத்தந்தியும் (8-10-2001) , தி. இந்து ஏடும் (7-10-2001)

முத்திரை ஸ்டாம்பு மோசடி, பிறக்காத பிள்ளைக்கு விற்றதாகப் பொய்த் தகவல் - இப்படிப்பட்ட மோசடி மஸ்தான்தான் மற்றவர்கள் ஊழல் செய்தார்கள் - லஞ்சம் வாங்கினார்கள் என்று கூரை ஏறிக் கொக்கரிக்கிறார்.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியாக மனிதனைக் கடித்த கதையாக, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையும் சீண்டிப்பார்த்தார் - விளைவு முதுகுத் தோல் உரிந்தது தான் மிச்சம்.

இந்து ஏட்டில் (5-10-2000) சு.சுவாமியின் பேட்டி ஒன்று வெளிவந்தது. (சு.சுவாமி தும்மினாலும் முதல் பக்கத்தில் மூன்று பத்தியில் செய்தி போட அக்கிரகார ஏடுகள் முண்டியடித்துக் கொண்டு கிளம்பிவிடுமே!)

வீரமணி யாழ்ப்பாணம் போய் பிரபாகரனைச் சந்தித்ததாக வழக்கமாக அவர் பாணியிலே குண்டைத் தூக்கிப் போட்டார். பிரபாகரனைச் சந்தித்து இருந்தால், ஆமாம், சந்தித்தேன்; அதில் என்ன தப்பு? என்று கூறக் கூடியவர்தான் தமிழர் தலைவர். ஆனால் உண்மைக்கு மாறாக அவிழ்த்துவிட்ட அந்தக் கரடியின் மூக்கை உடைத்தது போல மறுத்து அறிக்கை வெளியிட்டார் (விடுதலை 10-10-2000)

அந்தப் பேட்டியில் அக்கப்போர் சாமி அதோடு நிறுத்திவிடவில்லை.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று கூசாமல் கூறினார்.

அதற்கும் ஆதாரப் பூர்வமாகப் பதில் அடி கொடுத்தார் ஆசிரியர் - அதுவும் ஜெயின் கமிஷன் அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டி!

திராவிடர் கழகத்தின் பங்கு என்ன என்பது குறித்து Part III Vol. IV, Chapter VII என்ன கூறுகிறது?

விடுதலைப் புலிகளை இன்றும் ஆதரிக்கும் திராவிடர் கழகச் செயல் வீரர்கள் (D.K.Activists) பலர் உள்ளனர். ஆனால் திரு. ராஜிவ் காந்தி படுகொலையில் அவர்களில் எவர் ஒருவராவது சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டக் கூடியது எதுவுமே இல்லை என்றுதானே கூறப் பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டி சு.சுவாமியின் முகத்திலே கரியைத் தடவினார் கருஞ்சட்டை இயக்கத்தின் தலைவர்.

அத்தோடு விடுதலை அறிக்கையை முடிக்கவில்லை. கருஞ்சட்டைப் பட்டாளத்தின் தலைவர். ஓ, சு.சாமியே, உம்மைப் பற்றி ஜெயின் கமிஷன் அறிக்கை என்ன கூறுகிறது தெரியுமா? என்ற வினாவை எழுப்பி விலாவாரியாக எடுத்துக்காட்டி அங்குலம் அங்குலமாகச் சூடு போட்டாரே நினைவிருக்கிறதா?

அடுத்து, அதற்கும் வருவோம் !

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் திராவிடர் கழகத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று அபாண்டமாக பழி சுமத்திய சு.சாமியின் உள்ளி மூக்கை உடைத்தது ஜெயின் கமிஷன் என்றால், மூக்கையே முழுவதும் வெட்டி முடித்தது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்களின் விடுதலை அறிக்கை (10.10.2000)

எல்லாரிடத்திலும் விளையாடிப் பார்க்கலாம் என்று நினைத்த மனிதரின் ஆட்டபாட்டம் திராவிடர் கழகத்திடம் எடுபடவில்லை.

அந்த அறிக்கையிலே சு.சாமியின் அஸ்திவாரத்தையே நொறுக்கித் தள்ளி னார். அதில் ஒரு பகுதி இதோ:

ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கை மீது மத்திய அரசு மேற்கொண்ட அடுத்த கட்ட நடவடிக்கைபற்றிய ஓர் அறிக்கையில், இந்த யோக்கியர் சுப்பிரமணிய சுவாமியின் பங்கு ராஜீவ் காந்தி கொலையில் என்னவென்பது பற்றி என்ன குறிப்பிட்டிருக்கிறது என் பதை நாடு மறந்து விடுமா? நல்லவர்கள் மறந்து விடுவார்கள் என்பது இவரது நினைப்போ? 6 மாதங்களில் 8 முறை விசாரிப்பட்டவர் சு.சுவாமி (20-3-1995. 27-9-1995)

Memorandum of Action on the Final Report of Jain Commission of inquiry.

பக்கம் 17, 31 ஆகிய பக்கங்களில் என்ன கூறியிருக்கிறது - மத்திய அரசின் உள்துறை? இவரது குருஜி சந்திராசாமி, (அவரது டிரஸ்டில் இடம் பெற்றிருந்த டிரஸ்டிகளில் ஒருவர் சுப்பிரமணிய சுவாமி) பற்றி என்ன கூறியிருக்கிறது?

பக்கம் 16 மற்றும் பக்கங்கள் 26,27,28,29,30,31 Taking the entire evidence, material and circumstances brought on record into consideration, a doubt does arise regarding chanrdaswami’s complicity and involvement. so the matter requires further probe. Para 3, Page 232, vol iii) மற்றும் இந்த ATR இல் உள்ளவற்றை அப்படியே தருகிறோம். அதன் தமிழாக் கத்துடன் (தனியே இணைக்கப்பட் டுள்ளது. அது சுப்பிரமணிய சுவாமியின் முகமூடியைக் கிழித்துக் காட்டும்; நாளை வெளி வரும்)

இதன்படி பார்த்தால் ஜெயின் கமிஷன் பரிந்துரைகளை ஆராய்ந்தபின் மத்திய அரசு ((The Multi Disciplinary Monitoring agency) சுப்பிரமணிய சுவாமி பங்கு பற்றி மேலும் விசாரிக்கச் சொல்லித்தான் ஆணையிட்டிருக்கிறது.

திராவிடர் கழகத்தைப் பற்றியோ, வீரமணி பற்றியோ அல்ல.

அது மட்டுமா?

ஜெயின் கமிஷன் பரிந்துரைப்படி அவர் பல கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி மறைத்தமைக் காகவும், பொய்யான கருத்துகளையும் இட்டுக்கட்டி கூறியதற்காகவும் இந்திய குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) IPC section 179,193 ஆகியவைகளின் படி அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. வழக்கு நடந்து, இதன்படி சரியான தீர்ப்புக் கிடைத் தால் இவர் பத்தரை ஆண்டு தண்டனை யும், அபராதமும் செலுத்தி ஜெயிலில் தள்ளப்பட வேண்டிய நபர் ஆவார்.

1. இவரது கட்சியில் பொறுப்பில் இருந்தவரே இவரைப்பற்றிய சந்தேகம் கிளப்பி, இவரை அவரது வழக்கில் குறுக்கு விசாரணை ஜெயின் கமிஷனில் செய்தாரே அதற்கு விளக்கமான பதில் அளித்தாரா இவர்? (இதுபற்றிய தகவலும் வெளிவர உள்ளது)

2. அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் சார்பில் ஆஜராகிய ஆர்.என்.மிட்டல் என்ற வழக்கறிஞர் கேள்விகளுக்கோ செல்வி ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கேள்வி களுக்கோ இவர் ஒழுக்காகப் பதில் அளித்தாரா? திணறி, திக்குமுக்காடி உளறிக் கொட்டவில்லையா - இந்த உத்தமபுத்திரர்?

3. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இந்தியா அப்ராட் (india Abroad - வாசிங்டன் நாள் 22.10.1990) என்ற ஏட்டிற்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகள் முதன் முதலாக இஸ்ரேலியர் களிடம் தொடர்பு கொண்டு, மொசாட் என்ற இராணுவ அமைப்பிடம் இராணு வப் பயிற்சி பெற - தான் உதவியதாக கூறியவர் இந்த சுப்பிரமணிய சுவாமி தான். மேலும் சுப்பிரமணிய சுவாமி ஏற்கெ னவே எல்.டி.டி.யிடம் அனுதாபம் காட்டி வந்ததாகவும், ஈழப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆண்டன் பாலசிங்கம் தன்னை (CIA) சி.அய்.ஏ. ஏஜென்ட் என்று கூறிய தால் புலிகள் ஆதரவை தான் விலக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஜெயின் கமிஷனில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம்ஜெத்மலானி சுப்பிர மணிய சுவாமி பற்றி கமிஷனில் என்ன கூறினார்?

சுப்பிரமணிய சுவாமி நீண்ட கால விடுதலைப் புலிகளின் நண்பர். இந்தியா அப்ராட் பத்திரிகையின் செய்தியே அதற்குச் சான்று.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன் நண்பர்கள் ஊடுருவி இருப்பதாக சுவாமி கூறினார். நான் அடுத்தடுத்து குறுக்கு விசாரணை செய்தபோது, அவர் தன் கருத்தை மாற்றிக் கொண்டார். ராஜீவ் காந்திக்குப் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்த காலகட்டத்தில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் ராஜீவுக்கு வழங்க வேண்டும்; ஆனால் சுப்பிரமணிய சுவாமி அமைச்ச ராக இருந்த போது தக்க ஏற்பாடு எதுவும் செய்யவில்லை.

இந்தப் பாதுகாப்பை ராஜீவுக்கு வழங்க வேண்டும் என்று, அவர் பிரதமர் சந்திரசேகரிடம் விவாதிக்கவில்லை. சுப்பிரமணிய சுவாமி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். எனவே அவர்தான் இதற்குப் பொறுப்பு. கருணாநிதிக்கோ சுவாமியைப் போன்று பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. பிரதமர் ஆகும் தருணம் ராஜீவைவிட எனக்குத்தான் உண்டு என்று கூறியவரும் சாமிதான்.

இந்தியப் பிரதமராக சுப்பிரமணிய சுவாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார் என்று சுவாமியே கூறுகிறார். இப்படி ஒரு வியாதி நமது நாட்டுக்குத் தேவையா? 91 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலகட்டத்தில் அடுத்த பிரதமர் ராஜீவ்தான் என்பதை அனைவருமே பேசினர். இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி பிரதமராக வேண்டும் எனில் என்ன செய்வார்? - என்று ராம்ஜெத்மலானி ஜெயின் கமிஷனிலேயே கூறினார்.

இவ்வாறு அறிக்கையின் மூலம் திராவிடர் கழகத்துடன் மோதிய சு.சாமி பார்ப்பானின் முகமூடியை உடைத்தெறிந் தார் தமிழர் தலைவர்.

அதற்குப் பிறகு இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை இந்தஆசாமி. இவரைப்பற்றி ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கைமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் என்ன? அதையும் அடுத்துத் தெரிந்து கொள்வோமே!

தோழர் திருச்சி வேலுச்சாமி என்பவர் சு.சாமியின் அத்தியந்த நண்பர். சு.சாமியின் ஜனதா கட்சிக்கு அகில இந்திய செயலாளர். மாணவர் காங்கிரசிலிருந்து மாநில காங்கிரஸ் வரை பொறுப்புகளில் ஒரு காலகட்டத்தில் இருந்தவருங்கூட.

ஒரு கட்டத்தில் சு.சாமிக்கும், வேலுச்சாமிக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றின.
ஜெயின் கமிஷன் விசாரணையில் சு.சாமியை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளால் துளைத் தெடுத்தவர். மனுசன் ஆடிப்போய்விட்டார். ராஜிவ் கொலையில் சு.சாமிக்கும் தொடர்புண்டு என்று பகிரங்கமாகக் குற்றம் சாற்றியவர். பல அந்தரங்கத் தகவல்களை குமுதம் ரிப்போர்ட்டரில் (6-3-2008) அள்ளிக் கொட்டியவர்.

அந்தத் திடுக்கிடும் தகவல்கள் இங்கு அப்படியே தரப் படுகின்றன. படித்தால்தான் இந்தப் பச்சைப் பார்ப்பனரின் பதுங்குனித்தனங்கள் பச்சையகத் தெரியும்.

சொல்லுபவர் சு.சாமியின் கூட இருந்தவர் ஆயிற்றே - அவர் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஆயிற்றே - ஆதியும் அந்தமும் அங்குலம் அங்குலமாக அறிந்தவர் ஆயிற்றே - இதோ படியுங்கள்!

அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே... குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

முதலில் ஜெயலலிதாவும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொன்னபோது நான்தான் உங்கள் இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்து அறிமுகப் படுத்தி வைத்தேன். அப்படிப்பட்ட எனக் கில்லாத அளவுக்கு ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நட்பு என்றால் அது எப்படி என்பது எனக்குப் புரிகிறது. 1991ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் புரோகிராம்களும் மாறின. ஆனால் அதற்கு முன்பே தேர்தல் புரோகிராமை மாற்றியவர்கள் இரண்டே இரண்டு அரசியல் தலைவர்கள்தான். அதில் ஒருவர் நீங்கள். இன்னொருவர் ஜெயலலிதா. அந்த விதத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று எனக்குப் புரிகிறது.

அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் (ஜெ) சென்னை அய்க் கோர்ட்டுக்கு நீங்கள் போனபோது உங்களுக்கு அளித்த வரவேற்பை எந்த நண்பருமே கொடுத்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே நண்பர் என்ற முறையில் நீங்களும் அவருக்குச் செய்ததைப் போல எந்த நண்பரும் செய்திருக்க முடியாது. உங்கள் நண்பர், உயிர்த்தோழி இன்றைக்கு மீளமுடியாமல் போராடிக் கொண்டிருப்பது பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிய சொத்துக் குவிப்பு வழக்கில்தானே? அதற்குக் காரணமான புகாரை எழுதிக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்தவர் நீங்கள்தானே? அதுசரி, உங்களுடன் உட்கார்ந்து அதை அப்போது எழுதியவர் பொன்னையன். இன்றைக்கு அவர் அந்த அம்மாவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். வி.வி.சுவாமிநாதன், பி.ஹெச்.பாண்டியன் எல்லோரும்கூட அப்போது வந்து ஆலோசனை தந்தார்களே! மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராசாராம் வீட்டில் உட்கார்ந்துதானே அந்தப் புகாரைத் தயார் செய்தீர்கள்? அப்போது நானும் அங்கே இருந்தேன். அதை மறந்துவிட்டீர்களா? நாம் எப்படியெல்லாம் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா? இந்த உண்மை யெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன் எழுதிய விடை தெரியாத வினாக்கள் என்கிற புத்தகத்தில் பக்கம் முப்பதில் இலங்கையில் இருக்கக்கூடிய சிங்களர்கள் பீஹாரில் இருந்து குடி பெயர்ந்து போன ஆரிய வம்சாவளியினர் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த சிங்களர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய தமிழர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. அந்தச் சந்தேகம் உறுதியானதற்கு உங்கள் பேட்டியிலேயே காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக் காகப் போராடிக் கொண்டிருக்கிற, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற இளைஞ ரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும் கேவலமாகவும் நீங்கள் பேசும்போது உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஓர் ஆரிய-திராவிட வர்க்கப்போர் உருவாகிவிடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்ட வேண்டும்.

திருமாவளவன் புலிகளிடம் காசு வாங்கினார் என்று சொல்கிறீர்களே... புலிகள் அவர்களுடைய வாழ்க் கைக்கும், போராட்டத்துக்குமே திண்டாடுகிற நிலையில், அவர்கள் எங்கே இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்? ஆனால் உங்களுக்கு அமெரிக்காவின் சி.அய்.ஏ.விடம் இருந்து கோடி கோடியாக பணம் வருவதாகச் சொல்கிறார்களே? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் அப்பா தந்த சொத்து என்ன? நீங்கள் சம்பாதித்த சொத்து என்ன? என்று பட்டியல் போடுங்கள் பார்க்கலாம். அமெரிக்கா போகிறேன், ஜெர்மனி போகிறேன், லண்டன் போகிறேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பணம் எங்கேயிருந்து வந்தது? இதைச் சொல்லிவிட்டு அதன் பிறகு அல்லவா நீங்கள் எங்கள் இளவல் திருமாவிடம் கேள்வி கேட்கவேண்டும்?

திருமாவளவன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஒரு தேச பக்தர், மனிதாபிமானி. ஆனால் நீங்கள் தேசபக்தர் இல்லை என்பது மற்றவர்களைவிட உங்களுக்கும் எனக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியுமே!

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவுக்கா விசுவாசமாக இருக்கிறீர்கள்? இல்லையே. ராஜிவ் காந்தியை நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால், ராஜிவ் காந்தி செத்ததால் லாபமடைந்த முதல் மனிதர் நீங்கள்தானே? நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரசுக்குத் துளிகூட சம்பந்தம் இல்லாத உங்களை எப்படி டங்கல் காட் ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராகப் போட்டார்கள்? அதில் முன்னால் நின்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் நீங்கள்தானே? அதுவரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகுதானே இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்து விடப்பட்டது?

உலகத்தில் எந்த ஒரு கொலை நடந்தாலும், என்ன மோடிவ்? அல்லது யார் பயனாளி என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் ராஜிவ் கொலையில் கண்ணை மூடிக் கொண்டு உங்களைக் கை காட்டலாம். ஆனால், இந்த நாட்டின் துரதிருஷ்டம், உங்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவில்லை. அதை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

பாமரர்கள் எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறபோது, உங்களுக்கு லட்சக் கணக்கில் செலவு பண்ணி பாதுகாப்புத் தருவதால் எங்களுக்கு அவர்கள் (மத்திய அரசு) மேலேயே சந்தேகமாக இருக்கிறது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ்காரர்கள் எல்லாம் டூப்ளிகேட் என்று சொல்லியிருக்கிறீர்களே, எங்கள் கிராமத்தில் சொல்வார்கள் காமாலைக் கண்ணனுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள் என்று. அது போல நீங்கள் டூப்ளி கேட் என்பதால்தானே பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களுக்கு டூப்ளிகேட்டாகத் தெரிகிறார்கள்.

நீங்கள் ராஜிவ் காந்தி கொலையில் பல விஷயங் களைப் பற்றி பேசுகிறீர்கள். உங்களுடைய நண்பன் நான். ஜெயின் கமிஷனில் உங்கள் மேலேயே குற்றம் சொன்னேனே! உங்களைக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டேனே! நீங்கள் கைகால் வெலவெலத்துப் போய் வேர்த்து விறுவிறுத்து ஸ்தம்பித்து நின்றீர்களே... அந்தக் கமிஷனே அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதே. மறந்துவிட்டீர்களா? அந்தக் கமிஷனிலேயே நீங்கள்தான் கொலைக் குற்றவாளி என்று சொல்லியிருக்கிறேனே.

உங்களுக்கு நார்கோ அனாலிசிஸ் என்ற உண்மை யைக் கண்டறியும் சோதனை நடத்தினால், ராஜிவ் கொலையின் உண்மைச் சதி என்ன? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது உலகத்துக்கே தெரிய வந்து விடும். இதைச் சொல்கிற நேரத்தில் நீங்கள் இந்த டெஸ்ட்டுக்கு ரெடியா? என்று நீங்கள் கேட்கக்கூடும். முதலில் என்னை டெஸ்ட் செய்துவிட்டு, அப்புறம் உங்களை டெஸ்ட் செய்யட்டும். உங்களுடைய இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் இனிமேல் எடுபடாது.

இப்படிக்கு,
உங்களை உள்ளும் புறமும் புரிந்த ஒரே நண்பன் வேலுச்சாமி
(குமுதம் ரிப்போர்ட்டர், 6.3.2008)

சு.சாமியைப் பார்த்து, நீ ராஜிவ் காந்தியின் கொலைக் குற்றவாளி என்று கூண்டில் ஏற்றி முகத்துக்கு முகம் சொல்லியிருக்கிறார். சிங்களர்கள் ஆரியர்கள் என்று சு.சாமி சொன்னதை எடுத்துக் காட்டியிருக்கிறார். ஈழத் தமிழர் - சிங்களர் சண்டையை ஆரியர்-திராவிடர் போராட்டம் என்று நினைத்ததால் தான், சிங்களர்களுக்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சு.சாமி நின்றார் என்று கூறியிருக்கிறார். திருமாவளவன் மீது பழி சுமத்துவது பார்ப்பனக் கண்ணோட்டத்தில்தான் என்று பகிரங்க மாகக் கூறியிருக்கிறார். சொல்லியிருப்பது திராவிடர் கழகத் தலைவர் அல்ல.

சு.சாமியின் ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் என்பதை மறந்துவிடக் கூடாது.
இவர் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது என்ன செய்தார்? எந்த அளவு அத்து மீறினார்?

ராமகிருஷ்ண ஹெக்டே போன்றவர்கள் இந்த சு.சாமியை எவ்வளவு கேவலமாக விமர்சித்தனர்? தோண்டத் தோண்ட புதையல்கள் வருகின்றன.
அவற்றையும்தான் பார்த்துவிடுவோமே!

சு.சாமியின் ஜனதா கட்சியின் செயலாளர் வேலுச்சாமி குமுதம் ரிப்போர்ட்டரில் குற்றம் சுமத்தினாரே - அதையும் தாண்டி ஜெயின் கமிஷனிலும் சொல்லியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்தால் ராஜீவ் காந்தி படுகொலையில் சு.சாமி தலைமையில் சதி நடந்திருக்கிறது என்று சந்தேகிப்பதற்கு நிறைய காரணங்கள் கிடைக்கின்றன.

ஜெயின் கமிஷன்முன் வேலுச்சாமி என்ன சொன்னார்? என்று தெரிந்து கொள்ள ஆவலா? இதோ தோழர் வேலுச்சாமி ஜெயின் கமிஷன் முன் பேசுகிறார்:

சுப்பிரமணியசாமியை தேசிய தலைவராகக் கொண்ட ஜனதா கட்சியின் தமிழகக் கிளை பொதுச் செயலாளராக நான் பணியாற்றி இருக்கிறேன். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்தில் சாமியுடன் தான் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு இருந்தேன். சாமி மத்திய அமைச்சராக இருந்தபோது அவரின் தமிழகச் சுற்றுப் பயணங்களில் நான் அவரின் ஆங்கில உரையைத் தமிழாக்கிப் பேசி வந்தேன். அந்தத் தேர்தல் காலகட்டத்தில் நான் ஜனதா கட்சியின் சார்பில் திருச்சியில் வேட்பாளராக நின்றேன்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு நடந்த தமிழக தேர்தலில் ஜனதா கட்சி போட்டியிடவில்லை என்று சாமி கூறி இருக்கிறார். இது தவறு. நானும், வரதராஜன் (அணைக்கட்டு), வரதராஜன் (எழும்பூர்), ராமச்சந்திரன் (திருவெறும்பூர்), நாகராஜன் (பேரூர்) ஆகியோர் ஜனதா கட்சி சார்பில்தான் போட்டியிட்டோம்.

சுப்ரமணிய சாமி ஜெயின் கமிஷனில் சாட்சியம் அளித்தை நான் பத்திரிகைகளில் படித்தேன். அதில் அவர் முக்கியமான அம்சங்களை மறைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். இதனால் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. எனவே, உண்மையை வெளிப்படுத்த நான் முன்வந்தேன்.

1991ஆம் ஆண்டு மே 26இல் தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பிரச்சாரம் மே 24இல் முடிய இருந்தது.
ராஜீவ் படுகொலை மே 21இல் நடந்தது. இந்த தேதிகளில் சுப்ரமணியசாமியின் நடமாட்டம், நடவடிக்கை களை கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணை செய்தால் முக்கியமான பல உண்மைகள் வெளிவரும்.
மே 19இல் சாமி டில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நான் வரவேற்றேன். இருவரும் காரில் திருபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரம் சென்றோம். அங்கு பகல் 12.30 மணிக்கு உணவு உட்கொண்டோம். பின் வாலாஜாபாத் சென்று ஜனதா வேட்பாளர் மனோகருக்காக பிரசாரம் செய்தோம். பின்னர் 5 மணிக்கு காஞ்சிபுரம் வந்து பொதுக்கூட்டத்தில் பேசினோம். பின்னர் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு சென்று 8.30 மணிக்கு பிரசாரம் செய்தோம். பின்னர் 12 மணிக்கு வேலூர் போனோம். காரிலேயே சாமி தூங்கிக் கொண்டார்.

20ஆம் தேதி காலை 6 மணிக்கு சேலம் அடைந்தோம். அங்கு இருந்து நான் திருச்சி சென்று இரவு 8.30 மணிக்கு சேலம் வந்து சாமியுடன் சேர்ந்து கொண்டேன். பின் ஆத்தூர் சென்றோம். அங்கு இருந்து நான் திருச்சி சென்று விட்டேன். சாமி சென்னை சென்றார். 21ஆம் தேதி காலை அவர் விமானம் மூலம் டில்லி செல்வது என்பதே திட்டமாகும். 21ஆம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே அதை முடித்துக் கொண்டு 22ஆம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்கு சுற்றுப்பயணம் செய்கிறேன் என்று என்னிடம் பயணத் திட்டத்தை சாமி வகுத்துக் கொடுத்தார்.

ஆனால், 21ஆம் தேதி அவர் நடந்துகொண்ட விதம் பெரும் அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் உரியதாக இருந்தது. 21ஆம் தேதி சாமி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவும், அதிர்ச்சியாக வும் இருந்தன. அந்த நாளில் அவர் யார் யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21ஆம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கி இருந்தார். அங்கு அவர் ஏன் சென்னையில் ரகசியமாக தங்கி மர்மமான முறையில் நடந்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய சகாக்களுக்குக்கூட தகவல் தராமல் திடீர் என்று டில்லி பயணத்தை சாமி ஏன் ரத்து செய்தார் என்பது பெருத்த சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது.

மே 21இல் நான் டில்லிக்கு, காலையில் சாமி வீட்டுக்குப் போன் செய்தேன். சாமி சென்னையில்தானே இருக்கிறார் என சாமியின் மனைவி கூறினார். பின் சென்னையில் கட்சிப் பிரமுகர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். சாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. 21ஆம் தேதி காலை சாமி டில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பின் அவர் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். அங்கு இருந்து அன்றே அவர் டில்லி சென்றார். அவர் அன்று கார் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பெரும்புதூர் வழியேதான் பெங்களூர் சென்றார். அங்கு இருந்துதான் விமானம்மூலம் டில்லி போனார். சுப்ரமணிசாமி சென்னை பெங்களூர் மார்க்கத்தில் திருப்பெரும்புதூர் -வழியே காரில் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இதை தன் கட்சி சகாக்களிடமும் மறைத்தது ஏன்? பெங்களூரில் யாரைப் பார்க்க அவர் அவசரமாகப் போனார். ராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு இருக்கலாம். ராஜீவை படுகொலை செய்த பின்பு, பெங்களூர் வழியே அயல்நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம். இந்த நிலையில், பெங்களூருக்கு யாரையோ அவசரமாக சந்திக்க சாமி சென்றார்.

1991 மே 21இல் அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவருக்கு அமைச்சர் பதவிக்கு உரிய பல்வேறு ஏற்பாடுகள் உண்டு. 21ஆம் தேதி அவருக்கு என செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்னென்ன? பாதுகாப்பு வசதித் திட்டப் பதிவுகள் எவை எவை? இதுபற்றிய தஸ்தாவேஜுகளை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் கேட்டுப் பெறவேண்டும். இதன் மூலமாக பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.
1991 மே 21இல் சாமி டிரைடெண்ட் ஓட்டலில்தான் தங்கினார் என்பதை சாமியின் மிக நெருங்கிய நண்பர் மோதிலாலின் சகோதரர் ராஜ்குமார்தான் தெரிவித்தார். 23ஆம் தேதி சாமி திருச்சி வர பயணத் திட்டம் இருந்தது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள 21ஆம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் டில்லிக்கு சாமி வீட்டுக்குப் போன் செய்தேன். போனை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், ஓ... ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தியை சொல்லத்தானே போன் செய்தீர்கள் என்று கேட்டார். வேறு யாருக்கும் எதுவும் தெரிந்து இருக்காத அந்த அளவுக்கு விரைவில் சாமிக்கு மட்டும் எப்படி தகவல் கிடைத்தது என்பது மர்மமாக இருக்கிறது. இதுபற்றி ஜெயின் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். மிகச் சாதாரணமான குரலில் சாமி ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொன்னது என் மனதை வாட்டியது.

சிறிது நாட்கள் கழித்து சாமி எனக்கு டில்லியில் இருந்து போன் செய்து, சென்னை அழைத்தார். திருச்சியில் இருந்து நானும் வந்தேன். இருவரும் அப்பல்லோ மருத்துவமனை சென்று, மரகதம் சந்திரசேகரைக் கண்டு நலம் விசாரித் தோம். மரகதத்துக்கு துளி காயம்கூட ஏற்படவில்லை. உடல் நலம் குன்றி இருப்பது போன்று மரகதம் பாசாங்கு செய்த தாகவே எனக்குப் பட்டது. மரகதம் பற்றி நான் சாமியிடம் பேச முனைந்த போது, சாமி என் கையை இழுத்து பேச்சைத் தடுத்தார். பேசாமல் இருங்கள். ரூமுக்கு வந்த பின்பு சொல்கிறேன். நிறைய விஷயம் இருக்கு என்றார். பில்டஸ் நிறுவனம் ஒன்று பெரும் தொகையை செலவு செய்துள்ளது. மரகதத்துக்கே தெரியாமல் அவர் திருப்பெரும்புதூர் தலத்தை பொதுக் கூட்டத்துக்கு தேர்வு செய்யும்படி சிலர் செய்து விட்டனர். சதிகாரர்களுக்கு சாதகமாக இது அமைந்து விட்டது என்று சாமி என்னிடம் கூறினார்.

இந்த அளவுக்கு துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படி தெரிந்தன என்று நான் வியந்து போனேன். இதுபோன்ற தகவல்களைப் பற்றி ஆழமாக விசாரணை செய்யவேண்டும். 1993ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனதா கட்சியில் சந்திரலேகாவைக் கொண்டு வந்தார் சாமி. அப்போதில் இருந்து எனக்கும், சாமிக்கும் இடையே மன வருத்தங்கள் தோன்றின. சந்திரலேகாவை அவர் தமிழக ஜனதா தலைவர் ஆக்கினார். காலம் காலமாக உழைத்த தொண்டர்களை சாமி புறக்கணித்துவிட்டாரே என்று வருந்தி நான் ஜனதா கட்சியை விட்டு வெளியேறிவிட்டேன். இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. பிரதமருக்குத் தெரிவிப்பதற்கு முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி கிடைத்து விட்டது என்று சாமி கூறி இருப்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும்.
- இவ்வாறு வேலுசாமி கூறியிருக்கிறார்.

இதனைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
சுப்ரமணியசாமியின் சாட்சியத்தைப் பார்த்தோம். அதில் அவர் 4 முக்கிய விஷயங்களை மறைத்து இருக்கிறார். மூன்று பெரும் விவரங்களைத் தவறாகக் கூறி உள்ளார். எனவே, உண்மையை நிலை நாட்ட இந்த வாக்குமூலத்தை தாக்கல் செய்கிறோம். - இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து நீதிபதி ஜெயின் கூறியதாவது:
வேலுசாமியின் வாக்குமூலத்தில் சாமி பற்றிய குற்றச் சாற்றுகள் உள்ளன. எனவே, இந்த வாக்குமூலம் சாமிக்கு வழங்கப்படும். அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுக் களுக்கான பதில் வாக்குமூலம் தாக்கல் செய்யவும் சாமிக்கு அனுமதி அளிக்கப்படும். 2 வார காலத்தில் சாமி தன் பதில் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவேண்டும்.


சாமி: ஏற்கெனவே வேலுசாமியின் வாக்குமூலத்தின் பிரதிகள் அ.தி.மு.க.வினர் மூலமாக பத்திரிகைகளுக்கு வினியோகிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, என் பதில் வாக்குமூலத்தையும் பத்திரிகைகளுக்கு தர அனுமதி தர வேண்டும்.


நீதிபதி: பல பேர் முதலில் பத்திரிகைகளில் வாக்குமூலப் பிரதிகளைக் கொடுத்துவிட்டு பிறகுதானே ஜெயின் கமிஷனுக்கே வருகிறார்கள்.

-இவ்வாறு சாமி மீதான பிரச்சினை பற்றி ஜெயின் கமிஷனில் விவாதம் நடந்தது.
சு.சாமி பற்றி அவரின் நெருக்கமான சகா அப்படியே ஸ்கேன் ரிப்போர்ட் போல படம் எடுத்துக்காட்டியுள்ளாரே!

இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? புரியாத புதிராக இருக்கிறதே!

எத்தியோப்பியன் தனது நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பான் மட்டும் குறுகிய தன் இனப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்டான் என்றார் தென்னாட்டு லெனின் என்று போற்றப்பெற்ற டாக்டர் டி.எம். நாயர்.

இதற்கு வேறு யாரையும் தேடவேண்டாம். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சு.சாமி என்ற பார்ப்பனர் ஒருவரைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

உத்தரப் பிரதேசத்தில் கான்பூரில் இந்த சு.சாமி பார்ப்பனர் முன்னின்று பார்ப்பனர் மாநாட்டை நடத்தினார் என்றால் அவரின் பூணூல் துடிப்பைத் தெரிந்து கொள்ளலாமே!

அப்பொழுது உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி - கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து ஆட்சிப் பீடத்தில் இருந்தன. பார்ப்பனர்களுக்கு அது போதாத காலமாகக் கருதப்பட்டது. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்ததால். பார்ப்பனர் எதிர்ப்பில் சமரசத்துக்கே இடம் கொடுக்காத உருக்கு மனிதராக விளங்கினார். (இப்பொழுதுள்ள மாயாவதி அல்ல அப்பொழுது - அன்று கன்ஷிராம் என்ற கொள்கைவாதி பின்புலத்தில் பலத்தில் நின்றார்-)

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோற்றுவித்த பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் புயல் கன்ஷிராம் உருவத்தில் உ.பி.யில் சுழன்றடிக்க ஆரம்பித்தது. அதன் வெப்பத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், சு.சாமியின் முயற்சியால் ஓர் அமைப்பு அங்கு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பெயர் பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி என்பதாகும். அந்தப் பெயரால்தான் கான்பூரில் பார்ப்பனர் மாநாடு நடத்தப்பட்டது. (1995 பிப்ரவரி)

அந்த மாநாடு கூட்டப்படுவதற்கு முதுகெலும்பாக இருந்தவரே சு.சாமிதான். பல பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்களை மாநாட்டுக்குத் திரட்டிக்கொண்டு வர சு.சாமி மிகவும் பாடுபட்டார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு (8-2-1995) எழுதியது.

சு.சாமியின் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அரவிந்த் சதுர்வேதி என்னும் பார்ப்பனர்தான் உ.பி.யில் உருவாக்கப்பட்ட பிராமண சுயாபிமான் அந்தோலன் சமிதி அமைப்பாளர் என்றால் இதன் பொருள் என்ன? சு.சாமியின் ஜனதா கட்சியும் இந்தப் பார்ப்பனர் சமிதியும் வேறு வேறு அல்ல - இரண்டும் ஒன்றுதான் என்பது வெளிப்படையாகத் தெரிகிறதா, இல்லையா?

இந்தப் பார்ப்பனர் சங்கம் இந்தியா முழுவதிலும் ஏற்படுத்தப்படும் என்று அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. மாநாட்டின் திறப்பாளரே சு.சாமிதான். நிறைவுரை ஆற்றுவதாக அறிவிக்கப்பட்டவர் ஆயுதப்பேர மன்னன் சந்திராசாமி.

உலகம் முழுவதும் உள்ள பார்ப்பனர்களுக்கெல்லாம் ஒரே தலைவர் சு.சாமிதான் என்று மாநாட்டில் ஒருவர் பேசினார். அந்த அளவுக்கு சு.சாமி பார்ப்பன வெறியராவார்.

பரசுராமன் ஆயுதம் தாங்கிப் போரிட்டது போல நாமும் ஆயுதம் தாங்கிப் போராடுவோம் என்றெல்லாம் சு.சாமி முன்னின்று நடத்திய அந்தப் பார்ப்பன மாநாட்டில் வெறிக் கூச்சல் கிளப்பப்பட்டது.

இத்தகைய பார்ப்பனர் தி.மு.க. ஆட்சியைக் குறை சொல்லுவதும், கலைஞர் அவர்களைத் தாழ்வுபடுத்திப் பேசுவதும், ஆ.இராசாவை இழிவாகப் பேசுவதும் ஆச்சரியமான ஒன்றல்ல.
இந்த சு.சாமி மீது மானமிகு கலைஞர் அவர்கள் சொன்ன விமர்சனம் மிகவும் சரியானது; ரசிக்கத் தக்கதாகும்.

இல்லஸ்டிரேட்டட் வீக்லி (9-3-1991) எனும் வார இதழுக்கு கலைஞர் அவர்கள் அளித்த அந்தப் பேட்டியில்தான் சொன்னார்.

ஜெயலலிதா உட்பட மற்ற எவரையும்விட, உங்களை ஒழிப்பதில்தானே சு.சாமி தீவிரமாக இருக்கிறார் - அதற்குக் காரணம் என்ன என்பது கேள்வி.

கலைஞர் மிக அருமையாக, துல்லியமாகப் பதில் கூறினார்:
என்னைப் பொறுத்தவரை அவரை ஒரு மனநோயாளி என்றே கூறுவேன் என்றாரே பார்க்கலாம். கலைஞர் அவர்கள் ஏனோதானோ என்று சொன்னதாகக் கருதி விடக்கூடாது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக பயோனீர் ஏட்டுக்கு இந்த சு.சாமி அளித்த பேட்டி ஒன்றே போதுமானது.

தமிழ்நாட்டு மக்கள் மாற்றம் ஏற்படவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஒரு தேசிய கட்சி புதிதாக உருவாக வேண்டும் என்ற ஆவல் தமிழ்நாட்டு மக்களிடம் மேலோங்கி நிற்கிறது! அத்தகைய கட்சி எங்கள் ஜனதா கட்சிதான். முன்னாள் அய்.ஏ.எஸ்.அதிகாரியான சந்திரலேகா தலைமையில் செயல்படும் எங்கள் ஜனதா கட்சியைத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்த விரும்புகிறார்கள் என்று டில்லியிலிருந்து வெளிவரும் பயோனீர் (2-4-1995) ஏட்டுக்குப் பேட்டி கொடுத்தார் இந்த சு.சாமி. இப்படிச் சொல்லியிருப்பவர் மனநோயாளியா-இல்லையா? மானமிகு கலைஞர் அவர்கள் மிகச் சரியாகத்தானே கூறியுள்ளார்?

அதே சு.சாமி ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அதன் பெயர் என்ன தெரியுமா? இந்துஸ்தான் முன்னணி (ஏன் இந்து முன்னணி என்று பெயர் வைக்கலாமே. அதில் என்ன முக்காடு?) இந்த முன்னணி, சு.சாமி எழுதிய ஒரு நூலையும் வெளியிட்டது. “Building a New India” (புதிய இந்தியாவின் உருவாக்கம்). இந்த நூல் வெளியீட்டு விழா 1992 ஆகஸ்டில் சென்னையில் நடைபெற்றது.

வெளியிட்டவர் யாராம்? துக்ளக் சோ ராமசாமி. பெற்றுக் கொண்டவர் . . . இந்து ஏட்டின் ஆசிரியர் ரவி.

அந்த விழாவில் இந்த சு.சாமி திருவாய் மலர்ந்ததும் முக்கியமானதுதான் - அவர்களின் அங்க மச்ச அடையாளங்களைக் காட்டக் கூடியதுதான்.

நாட்டின் இணைப்பு மொழியாக சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் (தினமணி 5-8-1992) என்றார்.

அமைப்பின் பெயர்: இந்துஸ்தான் முன்னணி
எழுதப்பட்ட நூல்: Building a New India எழுதியவர்: சு.சாமி வெளியிட்டவர்: துக்ளக் சோ பெற்றுக் கொண்டவர்: இந்து ஆசிரியர் ரவி சு.சாமி வெளியிட்ட கருத்தோ,

நாட்டின் இணைப்பு மொழியாக சமஸ்கிருதம்
பார்ப்பன இன வெறி கொண்ட பச்சைப் பார்ப்பனர், சனாதனப் பார்ப்பனர், சவுண்டிப் பார்ப்பனர் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி தேவை?

கலைஞர் அவர்கள் சு.சாமியை ‘I can only assume that he is a mental case’ என்று இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழுக்கு அளித்த பேட்டியில் சொன்னார் என்றால், கருநாடக மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த இராமகிருஷ்ண ஹெக்டே கூறியது ஒரு படி மேலாகும்.

கழிவறைச் சுவரில் ஆபாசப் படங்களை வரைகின்ற மனநோயாளி! என்று சு.சாமி பற்றி ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

சீ. . . இவ்வளவு கேவலமான பிறவியை, சவுண்டியை வேறு எங்குப் போய்த்தான் பார்க்க முடியும் - தேடத்தான் முடியும்?
சு.சாமி, சோ போன்ற இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் இன்றைக்கு பார்ப்பனர்களுக்குத் தானைத் தலைவர்கள் என்றால் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாமே!

இப்போதைக்கு இது போதும். தேவைப்பட்டால் மீண்டும்.


நன்றி : விடுதலை.

No comments:

Post a Comment