கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 9, 2011

சாத்தூர் ராமச்சந்திரனின் தாய் மறைவு - மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அஞ்சலி


தமிழக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தாய் (08.02.2011) நேற்று காலமானார். அவரது உட லுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தாய் கே.கே.எஸ்.எஸ்.என்.ராஜலட்சுமி(93) நேற்று (08.02.2011) காலை 8.20 மணிக்கு காலமானார். அவரது உடல், விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள சாத்தூர் ராமச்சந்திரனின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாநில கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாநகர் மாவட்ட செயலர் தளபதி, முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, நெல்லை மாநகராட்சி துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
காங். சார்பில் விருதுநகர் எம்பி மாணிக்தாகூர், மாவட்ட தலைவர் கணே சன், மாநில மாணவரணி முன்னாள் தலைவர் நவீன், விருதுநகர் வட்டார தலைவர் வேலாயுதம், நகர்மன்ற தலைவர் கார்த்திகா, சிவகாசி நகர்மன்ற துணை தலைவர் அசோகன், மதிமுக சார்பில் மாவட்ட செயலர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்பி ரவிச்சந்திரன், விருதுநகர் நகர செயலர் நாகராஜன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment