தம்மீது சு.சாமி சுமத்திய அபாண்ட பழியை மறுத்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச் சர் துரை.முருகன் அறிக்கை விடுத்துள் ளார். அறிக்கை வரு மாறு:
எங்களுடைய தலை வர் கலைஞரைப் பற்றி சுப்பிரமணியம் சாமி தேவையில்லாமல் விமர்சித்த காரணத் தால், சுப்பிரமணியம் சாமி என்பவர் யார் என்பதை தெளிவுபடுத்த நான் ஒரு அறிக்கை யினை கொடுத்திருந் தேன். மீண்டும் சுப்பிர மணியம்சாமி எந்தவித மான ஆதாரமும் இல் லாமல் துரைமுருகன் அடிக்கடி துபாய் செல் வது ஏன் என்று கேள்வி கேட்ட தோடு, சி.பி.அய். தற்போது கைது செய்துள்ள பல்வாவுக்கு சொந்தமான விமானத் தில் நான் துபாய் சென்ற தாகவும் சொல்லியி ருக்கிறார்.
இது முழுக்க முழுக்க அப்பட்டமான பொய். என் மீது களங்கம் சுமத்த வேண்டுமென்ற நோக்கத் தோடு சுப்பிரமணியம் சாமி வழக்கம் போல பொய்யைச் சொல்லி யிருக்கிறார். நான் துபாய்க்கே இதுவரை இரண்டு, மூன்று முறை தான் சென்றிருக்கி றேன். அதுவும் தமிழ் மன்ற விழாக்களில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருக்கிறேன். அதுவும் பயணிகள் செல்லும் விமானத்திலே சென்றிருக்கிறேனே தவிர, தனிப்பட்ட வர்களின் சொந்த விமா னத்திலே செல்லவில்லை.
நான் அடிக்கடி துபாய் சென்றேன் என் பது உண்மையானால், சுப்பிரமணியம் சாமி அந்தத் தேதிகளை ஆதா ரத்தோடு சொல்லத் தயாரா? பல்வா என்ப வரை நான் புகைப் படத்திலே பார்த்திருக் கிறேனே தவிர, அவரை நான் நேரிலே கூடப் பார்த்தவனில்லை. ஆனால் நான் அவரு டைய விமானத்தில் அடிக்கடி பயணம் செய்ததாக சுப்பிர மணி யம்சாமி சொல்கிறார் என்றால், எந்த ஆதா ரத்தின் அடிப்படையிலே அதனைக் கூறுகிறார்?
உண்மைக்கு மாறான செய்திகளை சுப்பிரம ணியசாமி என்னைப் பற்றி வெளியிட்டிருக் கின்ற காரணத்தால், இதற்கு அவர் தன்னு டைய வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும். தவறினால் அவரை நீதி மன்றத்தின் மூலம் சந்திக்க நேரிடும்.
-இவ்வாறு துரை முருகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment