கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 19, 2011

நபிகள் பிறந்தநாள் முதலமைச்சர் கலைஞர் வாழ்த்து


முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடுக்கும் மிலாடி நபித் திருநாள் வாழ்த் துச் செய்தி வருமாறு:

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த திருநாள் மிலாடி நபி நன்னா ளாக இஸ்லாம் சமு தாய மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் எழுச்சியோடு கொண்டாடப் படுகிறது. நபிகள் நாயகம் அவர்கள் அன்பை, அமைதியைப் போதித்தார்; அறத்தை வலியுறுத் தினார். அடுத்தவர்க்கு உதவிகள் புரிவதை உயர்ந்த பண்பாகக் கருதினார். சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இருவருக்கும் மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்ம மாகும்;

ஒருவரை, அவரது வாகனத்தில் ஏறு வதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும்; நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும்; இடையூறு அளிப்பவை களைப் பாதையிலிருந்து அகற்று வது தர்மமாகும் எனக் கூறி அடுத் தவர் நலன் கருதி ஆற்றும் அருட் பணிகளையே அறம் என வலியு றுத்தினார்.

இத்தகைய அறநெறி களைப் போதித்த நபிகள் பெரு மான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக் கருதி மிலாடி நபித் திருநாளுக்கு 1989-ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணை யிட்டு நடைமுறைப்படுத்தியதை இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். 2001-இல் ஏற்பட்ட அதிமுக அரசு மிலாடி நபித் திருநாள் விடுமுறையை ரத்து செய்ததையும், 2006-இல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது மிலாடி நபித் திருநாளுக்கு மறுபடியும் அரசு விடுமுறை வழங்கி இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாகத் திகழ்வதையும் சுட்டிக்காட்டி; மிலாடி நபித் திருநாள் கொண் டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவர்க்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ் சார்ந்த நல்வாழ்த்துகளை உரித் தாக்குகின்றேன்.

இவ்வாறு தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment