நடப்பு நிதியாண்டில் அரசின் புதிய செலவினங்களுக்காக $11,772 கோடிக்கான துணை மதிப்பீடுகளை சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். இதில் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்துக்கு $258 கோடியும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு $212 கோடியும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று அரசின் துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
2010&11ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகள், கடந்த நவம்பர் 9&ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பணிகள், புதிய துணை பணிகளுக்குசட்டசபையின் ஒப்புதலை பெறவும், இந்த திட்டங்களுக்காக எதிர்பாராத செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட தொகையை ஈடுசெய்வதும் இதன் நோக்கமாகும்.
தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய சில புதிய செலவு பொறுப்புகள் இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு மின்சார வாரியம் அரசுக்கு செலுத்த வேண்டிய மின் வரி மற்றும் மின் வரி மீதான அபராத வட்டித் தொகை $1235.13 கோடியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதனமாக அரசு மாற்றியுள்ளது. இந்த தொகை எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்துக்கு அரசுக்கு கூடுதலாக $258.22 கோடி தேவைப்படுகிறது. இந்த தொகை, தகவல் தொழில்நுட்ப துறையின் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்படுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட கூடுதலாக அரசுக்கு தேவைப்படும் $214.52 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாநில போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம் மற்றும் தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்துக்காக கூடுதலாக $623.49 கோடி வழிவகை முன்பணமாக தேவைப்படுகிறது. இந்த தொகை போக்குவரத்து துறையின் துணை மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
மொத்தமாக $11,772 கோடி அளவிலான இந்த துணை மதிப்பீட்டில் $9144 கோடி வருவாய் கணக்கிலும், மீதி தொகை
$2628 கோடி மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
இவ்வாறு நிதியமைச்சர் அன்பழகன் கூறினார்.
நிதியமைச்சர் தாக்கல் செய்த துணை மதிப்பீடுகள் சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment