ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சி.பி.அய். நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததற்காக சுப்பிரமணிய சாமிக்கு முதலமைச்சர் கலை ஞரின் வழக்குரைஞர் தாக்கீது அனுப்பி உள்ளார். அவதூறு கருத்தை 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெறாவிட்டால் கிரி மினல் வழக்கு தொடரப்படும் என் றும் அவர் எச்சரிக்கை விடுத்துள் ளார்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதலமைச்சர் கலைஞரையும் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியசாமி டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் தெரி வித்து இருந்தார். அதுமட்டு மின்றி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட் டில் முதலமைச்சர் கலைஞர் உள்பட அரசியல் கட்சி தலைவர் களுக்கு உள்ள பங்கு குறித்தும், தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப் படுவது பற்றியும் தனித்தனியே 2 மனுக்கள் தாக்கல் செய்ய உள்ள தாகவும் சி.பி.அய். நீதிமன்ற நீதிபதி யிடம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேவையில்லாமல் தனது பெயரை இழுப்பதற்காக சுப்பிரமணியசாமிக்கு முதல மைச்சர் கலைஞர் வழக்குரைஞர் மூலம் தாக்கீது அனுப்பி உள்ளார். அவரது சார்பில் மூத்த வழக் குரைஞர் பி.ஆர்.ராமன், சுப்பிர மணியசாமிக்கு அனுப்பியுள்ள தாக்கீதில் கூறப்பட்டு இருப்ப தாவது:-
தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் 70 ஆண்டுகாலமாக பொதுச் சேவையிலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பின ராகவும், 5 முறை முதலமைச்ச ராகவும் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் முக்கியத்துவமான நிலையிலும், இந்திய அரசியலில் ஒரு மூத்த ராஜதந்திரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர்.
6ஆம் தேதியும், நேற்றைய முன்தினமும் (5ஆம் தேதி) தமிழ், ஆங்கில பத்திரிகைகளில், வெளிப் படையான பத்திரிகை அறிக்கை ஒன்று தாங்கள் வெளியிட்டதாக நம்பப்படும் வகையில் வெளியாகி யுள்ளது. அதில், நீங்கள் ஆஜராகி, `2-ஜி ஸ்பெக்ட்ரம்' என்று கூறப்படும் வழக்கு `சி.பி.அய். விசா ரணை செய்வதைவிட மிகவும் விரிவானது' என்றும், உங்களு டைய சொந்த தகவலின்படி இந்தப் புகாரில் தேசிய பாது காப்பு குறித்த கவலைகளும் தமிழக முதலமைச்சரின் ஈடு பாடும் உள்ளதாக வெளிப்படை யாகத் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது.
எங்களது கட்சிக்காரரையும் வழக்கில் சேர்க்க மனு சமர்ப் பிக்கும் உங்களது நோக்கத்தை யும், நீங்கள் தெரிவித்தாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின் றன. எங்கள் கட்சிக்காரர் குறித்து நீங்கள் மேலே கூறியவை தனிப் பட்ட குரோதம், அரசியல் போட்டி மனப்பான்மை, மலிவான விளம் பரம் ஆகியவற்றால் உந்தப்பட் டது என்றும், மற்றபடி அவை யாவும் பொய்யானவை என்றும் எங்களது கட்சிக்காரர் கூறு கிறார்.
நீங்கள் கூறியதாக தெரிவிக்கப் பட்டுள்ளவை எங்களது கட்சிக் காரரின் புகழுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. உங்களது நோக்கமும் அதுவே தான். மேற்கூறிய உங்களது கூற்று கள் யாவும் மலிவான விளம்பரத் துக்கான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது ஆகும். அதுமட்டு மின்றி எங்களது கட்சிக்காரரின் மரியாதை, புகழ் ஆகியவற்றை மோசமாகப் பாதிக்கும் உள்நோக் கத்துடன் பொறுப்பற்ற முறை யில் கூறப்பட்டவை ஆகும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு என்று கூறப்படுவதில் எங்களது கட்சிக்காரருக்குத் தொடர்பு உண்டு என்று கூறப்படுவதைப் பற்றி உங்களுக்குத் தகவல் இல்லை என்றும், உங்களுக்குத் தெரியாது என்றும் எங்களது கட்சிக்காரர் கூறுகிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு என்று கூறப்படுவதில் எங்களது கட்சிக் காரருக்கு எந்தவிதமான தொடர் பும் இல்லை. அவரது நற்பெயரை தொடர்புபடுத்தும் உங்களது முயற்சி உள்நோக்கம் கொண்டது. மேற்கூறிய கூற்று வேண்டு மென்றே, அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் தீயநோக்கம் கொண் டவை ஆகும்.
நீங்கள் மேற்கூறிய கூற்றை 24 மணி நேரத்துக்குள் வெளிப் படையாக திரும்பப்பெற வேண் டும் தவறினால் எங்களது கட்சிக் காரரை அவதூறு செய்ததற்காக உங்களுக்கு எதிராக முறையான சிவில் மற்றும் அல்லது கிரிமினல் வழக்கு தொடரவும், அத்துடன் உங்களை அதற்கான அனைத்து செலவினங்கள் மற்றும் பின் விளைவுகளுக்குப் பொறுப்பாக்க நிர்ப்பந்தம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment