சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 16.02.2011 அன்று தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்ற தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 106 பேரை விடுவிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கவிஞர் கனிமொழி எம்.பி.,கைது
மயிலாப்பூரில் இருந்து புறப்பட்ட பேரணி ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் அருகே செல்வதற்கு முன்பே கனிமொழி உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரை காவல் துறையினர் தடுத்துக் கைது செய்தனர்.
அப்போது இலங்கையைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் செய்ததோடு அந்நாட்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
மீனவர்கள் கடும் அதிர்ச்சி!
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 106 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி நாகையில் இருந்து கடலுக்கு 18 படகுகளில் சென்ற மீனவர்கள் 106 பேர் இதுவரை கரை திரும்பவில்லை.
இது குறித்து இலங்கை மீனவர்களிடம் நாகை மீனவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 106 பேரை இலங்கைக் கடற் படையினர் பிடித்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
மீன்பிடிக்கச் சென்ற 106 பேர் கைது செய்யப் பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் கலைஞரை 16.02.2011 அன்று சந்தித்து கைது செய்யப்பட்டுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர் .
இரண்டு மீனவர்கள் கொலை
கடந்த மாதம் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப் பட்டனர் என்பது நினைவில் கொள்ளத்தக்க செய்தியாகும்.
No comments:
Post a Comment