தமிழக அரசு இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கட்டங்களாக 1 கோடியே 58 லட்சத்து 82 ஆயிரத்து 186 குடும்பங்களுக்கு டி.வி. வழங்கப்பட்டுள்ளன.
ஆறாவது கட்டமாக 10 லட்சம் கலர் டி.வி. கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 11 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் 02.02.2011 அன்று மாலை பெறப்பட்டன.
ஒப்பந்தப்புள்ளிகள் முதல்வர் கருணாநிதி தலைமையில், இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு உறுப்பினர்களான துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டி.யசோதா மற்றும் ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாலை திறந்து ஆய்வு செய்யப்பட்டது.
சன்டெக் விஷன் லிமிடெட் நிறுவனம் ஒரு தொலைக்காட்சி பெட்டிக்கு குறைந்த விலையாக ணீ2,௪௯௭ குறிப்பிட்டிருந்தது. சன்டெக் விஷன் நிறுவனம் குறிப்பிட்டிருந்த விலையில் கலர் டி.வி. வழங்க, மற்ற 10 நிறுவனங்களும் ஒப்புதல் அளித்தன. இதன் அடிப்படையில், 10 லட்சம் கலர் டி.வி.க்களை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகள் இந்த 11 நிறுவனங்களுக்கு விரைவில் பிறப்பிக்கப்படும்.
இத்தகவலை தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
உலமாக்களுக்கு இலவச சைக்கிள் :
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கோயில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதேபோல, தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த உலமாக்களுக் கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் கருணாநிதியிடம் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment