கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, February 5, 2011

1000 பேர் தி.மு.க.வில் இணைந்தனர் 6ம் முறையாக கருணாநிதி முதல்வராவார் - துணை முதல்வர் மு.க.ஸ்டா லின்


தேர்தலில் திமுக வெற்றி பெற்று கருணாநிதி 6ம் முறையாக முதல்வராவார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா 04.02.2011 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வக்கீல் அணித் தலைவர் பிச்சைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நவநீதன், ஒன்றியச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் செல்லப்பன், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத் தலைவர் ஆறுமுகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ், தாந்தோணி ஒன்றிய துணைச்செயலாளர் சரவணன் மற்றும் அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறைத் தலைவர் மோகன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இங்கு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகி கனகராஜ் பேசியபோது குறிப்பிட்ட சமுதாய அமைப்பில் இதுவரை பணியாற்றி னோம். இனி ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு பாடு படும் தி.மு.க.வில் இணைந்துள்ளோம் என்றார். இப் போது நாம் ஆட்சியில் இருக்கிறோம். ஆனால் ஆட்சி செய்வதற் காக மட்டும் தி.மு.க. உருவாக்கப்படவில்லை. சமுதாயப் பணிகளை ஆற்றி வந்த தி.மு.க. 1957ல் தேர்தல் களத்தில் இறங்கியது. முதலில் 15 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1962ல் 50 இடங்களில் வெற்றி பெற்றோம். 1967ல் பெரும்பான்மை பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தோம்.
1971ல் கருணாநிதி தலைமையில் மிகப் பெரிய வெற்றி பெற்றோம். 1976ல் ஆட்சி பொறுப்பை இழந் தோம். அதன்பின் 13 ஆண்டு கள் கழித்து 1989ல் ஆட்சிக்கு வந்தோம். 1991 தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். 1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். 2001ல் தோல்வி அடைந்தோம். 2006ல் தி.மு.க. வெற்றி பெற்று 5ம் முறையாக கருணாநிதி முதல்வர் ஆகியிருக்கிறார்.
2011 தேர்தலிலும் உங்கள் ஆதரவோடு 6ம் முறையாக கருணாநிதி நிச்சயம் ஆட்சிப் பொறுப்புக்கு வருவார். வெற்றி தோல்வி மாறி மாறி வரும். தி.மு.க. போல மிகப் பெரிய வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கட்சியும் இல்லை. வெற்றி வந்தால் வெறி கொண்டு அலைவதும் கிடையாது. தோல்வியை கண்டு சில கட்சிகளைப் போல துவண்டு விடுவதும் கிடையாது.
இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க. வில் இணைந்துள்ளீர்கள். இதற்கு பதவி பெற வேண்டும் என்ற காரணம் கிடையாது. வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் தி.மு.க. தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் என்ற நம்பிக்கை உங்களிடம் அழுத்தமாக உள்ளது. கார ணம் கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment