13வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடர் 10.02.2011 அன்றுடன் முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் 235 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவையில் 10.02.2011 அன்று , இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதத்திற்கு நிதி அமைச்சர் பதில் அளித்து பேசினார். பின்னர் மசோதாக்கள் நிறைவேற்றன. அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் பேசியதாவது:
இந்த 13வது சட்டப் பேரவையின் 15 கூட்டத்தொடர்கள், 2006ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி தொடங்கி 10.02.2011 அன்று வரை நடந்துள்ளது.
5 ஆண்டுகளில் 226 நாட்கள் பேரவை கூடியுள்ளது. 902 மணி 8 நிமிட நேரம் நடந்துள்ளது. 2006, 07, 08 ஆகிய ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி 3 மணி நேரமும், 2009, 10, 11 ஆகிய ஆண்டுகளில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 மணி 43 நிமிட நேரமும் பதில் அளித்துள்ளனர். அமைச்சர்கள் 109 மணி 48 நிமிடம் பதில் அளித்துள்ளனர். முதல்வர் தனது துறை சார்பில் 7 மணி 2 நிமிடம் பதில் அளித்துள்ளார்.
ஐந்தாண்டில் திமுக தரப்பில் 272 முறையும், அதிமுக 276, காங்கிரஸ் 312, பாமக 191, மார்க்சிஸ்ட் 156, இந்திய கம்யூனிஸ்ட் 142, மதிமுக 90 முறையும் உறுப்பினர்கள் பேசியுள்ளனர். உறுப்பினர்களிடம் இருந்து 1,35,382 வினாக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் அதிக பட்சமாக கோவை தங்கம் 29,139 வினாக்கள் கேட்டுள்ளார்.
அமைச்சர் நேரு 116 வினாக்களுக்கு பதில் அளித்துள்ளார். உரிமை மீறல் குறித்து 16 பிரச்னைகள் எழுப்பப்பட்டன. அதில் 11 உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பேரவை நடந்த அணைத்து நாட்களிலும் உறுப்பினர்கள் அங்கையற்கண்ணி, எம். அன்பழகன், சபா. ராஜேந்திரன், உதயசூரியன், ஐயப்பன், கண்ணன், காமராஜ், சுந்தர், திருநாவுக்கரசு, வி.எஸ்.பாபு, ரங்கநாதன், விடியல் சேகர், ஜான் ஜேக்கப் ஆகிய 13 பேர் வந்துள்ளனர்.
பேரவையில் 235 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 110 விதியின் கீழ் முதல்வர் 18 அறிக்கைகளும், துணை முதல்வர் 8 அறிக்கைகளும் அளித்துள்ளனர்.
பார்வையாளர் மாடத்தில் ஆண்கள் 72,687 பேரும், பெண்கள் 9,039 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த பேரவையில், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச காப்பீட்டு, இலவச வீடு, இலவச கலர் டிவி, மெட்ரோ ரயில், புதிய தலைமைச் செயலகம், கூவம் நதி சீரமைப்பு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
5 ஆண்டில் 235 மசோதாக்கள் நிறைவேறின - மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு :
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 5ம் தேதி 2011&2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இதன் மீது கடந்த 7ம் தேதி முதல் 10.02.2011 அன்று வரை விவாதம் நடந்தது. விவாதத்திற்கு நிதி அமைச்சர் 10.02.2011 அன்று பதில் அளித்தார்.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 5ம் தேதி 2011&2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இதன் மீது கடந்த 7ம் தேதி முதல் 10.02.2011 அன்று வரை விவாதம் நடந்தது. விவாதத்திற்கு நிதி அமைச்சர் 10.02.2011 அன்று பதில் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, பேரவையின் கூட்டம் 10.02.2011 அன்று மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் அறிவித்தார். இதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும் நிதி அமைச்சருமான அன்பழகன் கொண்டுவந்தார்.
‘’தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலச் சட்ட முன்வடிவு” உள்பட 7 மசோதாக்கள் பேரவையில் நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டது. 2011&2012ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன
No comments:
Post a Comment