மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை சார்பில் அமைச்சர் மு.க.அழகிரியின் முயற்சியால் 12 இடங்களில் ரூ.90 லட்சத்தில் அமைக்கப்பட்ட , அதி நவீன நிழற்குடைகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் 30 கிராமங்களில் நவீன நிழற்குடை அமைப்பதற்கு ரூ.18 லட்சம் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் துறை சார்ந்த ஆர்.சி.எப். உர நிறுவனம் சார்பில் மதுரை நகரில் புதூர், சிம்மக்கல், வசந்த நகர், பெத்தானியாபுரம், நெல்பேட்டை உள்ளிட்ட 12 பஸ் ஸ்டாப்புகளில் ரூ.90 லட்சத்தில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் 30 கிராமங்களில் ஆர்.சி.எப். உர நிறுவனம் சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ரூ.18 லட்சத்தை அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் ஆர்.சி.எப். நிறுவனத் தலைவர் ராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் காமராஜிடம் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு வீல் சேர், கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டன. மேலும் 5 இடங்களில் இலவச மருத்துவ முகாமிற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் அளிக்கப்பட்டன. மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மு.க.அழகிரி பரிந்துரை ஏற்று ஆர்.சி.எப். உர நிறுவனம் வழங்கி உள்ளது.
ஆர்.சி.எப். நிறுவன பொதுமேலாளர் கார்த்திக்கேயன், உதவி வணிக மேலாளர் மவுலி சங்கர், மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி, மூர்த்தி., தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.
No comments:
Post a Comment