திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி நிர்வாகிகள் இன்று (26.02.2011) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக உடன்பாடு ஏற்பட்டது. இதனை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை திமுக நடத்தி வருகிறது.
இதில் பாமகவுக்கு 31 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதற்கு அடுத்தப்படியாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
No comments:
Post a Comment