தகவல் தொழில்நுட் பத்தில் இந்தியா முதல் மாநிலமாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் கலைஞர் கூறினார்.
19.2.2011 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற மதுரை, திருநெல்வேலி எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்கள் மற்றும் சென்னை மாநில தரவு மய்யம் தொடக்க விழா வில் தமிழக முதல மைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:
மதுரை, திருநெல் வேலி ஆகிய மாவட் டங்களில் அமைக்கப் பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களை யும், சென்னை மாநகரில் அமைந்துள்ள மாநிலத் தரவு மய்யத்தையும் காணொ லிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கும் இந்த இனிய நிகழ்ச்சியில் உங் களையெல்லாம் சந்திப் பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில், தமிழ் நாடு மின்னணு நிறு வனம் (எல்காட்) மூலம், முதல்நிலை நகரங்களில் மட்டும் நிறுவப்பட்டுச் செயல்பட்டு வரும் தக வல் தொழில் நுட்ப வியல் பூங்காக்களை இரண்டாம்நிலை நக ரங்களிலும் அமைத்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்தது.
அதன்படி, இரண் டாம் நிலை நகரங்களான மதுரை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம், கோயம் புத்தூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங் களில் ஒருங்கிணைந்த தகவல் தொழில் நுட்ப வியல் வளாகங்கள் உரு வாக்கிட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட் டன. அதற்காக, அந்நக ரங்களில் பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப் பட்டு, அந்த இடங் களுக்கு மய்ய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டல அங்கீகாரமும் பெறப்பட்டு உள்ளது.
இந்தத் தகவல் தொழில் நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டல வளாகங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த பொது உள் கட்டமைப்பு வசதி களான உட்புற சிமின்ட் சாலைகள், தரவு வட கம்பி, மின்வட கம்பி மற்றும் மழைநீர் வடி கால் கால்வாய்கள், கழிவு நீர்ச் சுத்திகரிப்பு ஆலை, தெருவிளக்குகள், சுற்றுப் புறச் சுவர், மதகுப் பாலங் கள், சுங்க அலுவலகக் கட்டடம், நிருவாகக் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு வரு கின்றன.
மதுரையில் இரண்டு தகவல் தொழில் நுட்ப வியல் பூங்காக்களை அமைத்திட தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி, இலந்தைக் குளம் கிராமத்தில் 28.91 ஏக்கர் நிலப்பரப்பையும், வடபழஞ்சி கிராமத்தில் 245.17 ஏக்கர் நிலப்பரப் பையும் தமிழ்நாடு மின் னணு நிறுவனத்திற்கு வழங்கியது. இப்பூங் காக்களுக்கு 26.4.2008 அன்று அடிக்கற்கள் நாட் டப்பட்டு; இன்று (19.2.2011) திறந்து வைக்கப்படுகின் றன. இலந்தைக்குளம் தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ் நாடு மின்னணு நிறு வனம் 32 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதில், 18 கோடி ரூபாய்ச் செலவில் 50 ஆயிரம் சதுர அடி நிலப் பரப்பில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிரு வாகக் கட்டடங்கள்; 7 கோடியே 44 லட்சம் ரூபாய்ச் செலவில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.
இலந்தைக்குளம் தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் இரண்டு தக வல் தொழில் நுட்பவி யல் சார்ந்த நிறுவனங் கள் அமைகின்றன என் பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி ரூபாய்ச் செல வில் பொது உள்கட்ட மைப்பு வசதி ஏற்படுத் தப்பட்டுள்ள வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் மூன்று தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில்நுட்ப வியல் சார்ந்த நிறுவனங் கள் அமைய உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 5 ஆண்டு காலத்தில் இப் பூங்காக்களின்மூலம் 1400 கோடி ரூபாய் அள விற்கு முதலீடுகளும், 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், ஒரு லட்சம் பேருக்கு மறை முக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண் டான் கிராமத்தில் 500 ஏக்கரில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவும் இன்று தொடங்கி வைக்கப்படு கிறது. இதில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் முதலீடு 50 கோடி ரூபா யாகும். இப்பூங்காவில் மூன்று தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பூங் காவில் முதற்கட்டமாக 13 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 100 ஏக்கர் நிலப் பரப்பில் பொது உள் கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின் றன. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்ட லத்தில், எல்காட் நிறு வனம் 50 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் தக வல் தொழில்நுட்பப் பூங்காவிற்கான கட்ட டம் கட்டியுள்ளது.
இப்பூங்காவிற்கு அடுத்த 5 ஆண்டு காலத் தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முத லீடும், 40 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப் பும், 80 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப் பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கி வைக்கப்படும் மூன்றா வது திட்டம் தேசிய மின் ஆளுமை வடிவ மைப்பின் தூண்களில் முக்கியமான ஒன்றான மாநில தரவு மய்யம் (ளுவயவந னுயவய ஊநவேசந) ஆகும். இந்த மாநிலத் தரவு மய்யம் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பெருங் குடி வளாகத்தில் ஏற்கெ னவே செயல்பட்டுவரும் எல்காட் நிறுவனத்தின் தமிழக பெரும்பரப்பு வலை அமைப்புச் செய லாக்க மய்யம் அமைந் துள்ள அதே கட்டடத் தில் நிறுவப்பட்டுள்ளது.
இது, ஏறத்தாழ 4500 சதுரடி பரப்பளவில் 35 வழங்கிகளும், 5 வலை யமைப்பு அடுக்குகளும் கொண்ட வரையறுக்கப் பட்ட மிகப் பெரிய தரவு மய்யமாக அமைக்கப் பட்டுள்ளது.
மிகச்சிறந்த மின் சேவை களை அரசிடமிருந்து அரசுக்கும், அரசிடமி ருந்து மக்களுக்கும், அர சிடமிருந்து வணிகத் திற்கும் அளிக்கும் வகை யில் இத்தரவு மய்யம் செயல் படுத்தப்படும். தமிழகத்தின் பெரும் பரப்பு வலையமைப்பின் வாயிலாக அரசு மற்றும் அதன் முகவர்களும், மக்கள் பொது சேவை மய்யத்தில் இணையம் வாயிலாகப் பொதுமக் களும் இத்தரவு மய்யச் சேவைகளைப் பெற இய லும் என்பதை அறிவிக்க விரும்புகிறேன். மத்திய, மாநில அரசின் பங் களிப்புடன் செயல்படும் இத்திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அதன் பங்களிப் பாக 55 கோடியே 80 லட்சம் ரூபாயையும்; தமிழக அரசு தனது பங் களிப்பாக 5 கோடியே 16 லட்சம் ரூபாயையும் அளித்துள்ளன.
இத்தரவு மய்யத்தை அமைத்ததன் மூலம் இந் தியாவிலேயே இத்தகைய நவீன தகவல் தொழில் நுட்ப வசதிகளைக் கொண் டுள்ள முதல் மாநிலமா கத் தமிழ்நாடு திகழ் கிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடை கிறேன் (கைதட்டல்) என்பதைத் தெரிவித்து, எனது உரையை இந்த அளவோடு நிறைவு செய் கிறேன்.
- இவ்வாறு கலை ஞர் உரையாற்றினார்.
No comments:
Post a Comment