முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், 21.02.2011 அன்று அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவரது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,
முதல் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். எனது சகோதரி மகன் திருமண அழைப்பிதழை குடும்பத்தினருடன் சென்று கொடுத்து திருமண விழாவுக்கு அழைத்தேன். காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள தி.மு.க. கூட்டணி, மெகா கூட்டணி. இது சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும். முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்.
இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 6 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். சட்டசபை தேர்தலின் போது, டாக்டர் ராமதாசும், நானும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வோம். தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து, தி.மு.க. கிளை ஒன்றிய நிர்வாகிகளுடன் நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படும். இதன் மூலம் தேர்தலில் சிறப்பாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும் என்றார்.
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Monday, February 21, 2011
கலைஞர் 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார்: அன்புமணி ராமதாஸ்
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்றும், முதல்வர் கருணாநிதி 6வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவார் என்றும், பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment