கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, February 8, 2011

நீதிமன்றத்திற்கு வெளியே சொன்ன கருத்துக்குதான் சுப்ரமணியசாமிக்கு நோட்டீஸ் - அமைச்சர் துரைமுருகன்


சுப்ரமணியசாமிக்கு முதல்வர் கருணாநிதி ஏன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுப்ரமணியசாமி என்பவர் யார், அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள். தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் தான் ஏதோ மெத்தப்படித்த மேதாவி என்பதைப்போல காட்டிக் கொள்பவர். அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி. நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டிவிட்டு வருபவர். ஒரு கட்சி யில் கூட நிலையாக நிற்காத அரசியல் நாடோடி. ஆதாயம் கிடைக்கிறது என்றால் யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர். ஆனால் அவருக்கு தான் ஒரு அறி வாளி என்கிற நினைப்பு.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இப்படித்தான் அந்த அம்மையாரைப் பற்றி விமர்சனம் செய்தார். அதற்காக அவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அதிமுகவின் மகளிர் அணியினர் அவருக்கு ‘தகுந்த’ வரவேற்பு ஒன்றினை அளித்து, அப்போதே அது ஏடுகளில் எல்லாம் வெளிவந்தது. காவல் துறையினரின் பாதுகாப்பு அவருக்கு இன்றும் உள்ளது. அந்த பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால் அவர் ஈடுபடும் நடவடிக்கைகளுக்கு ஊருக்கு ஊர் தர்ம அடி விழும்.
5.2.2011 அன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீதிபதியிடம் அதிலே வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கிறது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூறினார். உடனே நீதிபதி வேறு சிலர் என்றால் யார் என்று வினவ, உடனே இவர் முதல்வர் கருணாநிதியின் பெயரை சொல்லியதோடு, அதே கருத்தை வெளியிலும் வந்து செய்தியாளர்களிடம் கூறினார். அந்த பேட்டி தொலைக்காட்சியில் மாத்திரமல்லாமல் ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. அதை வைத்துதான் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முதல்வர் கருணாநிதிக்காக சுப்ரமணியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது வழக்கறிஞர். ஆனால் அதை கருணாநிதியே அனுப்பியதுபோல நினைத்துக் கொண்டு மீண்டும் பதில் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்திற்குள் சொன்னதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப முடியாது, அதுகூட தெரியா மல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், அது நீதிமன்ற கண்டனம் என்றும் விஷயம் தெரியாமல் சொல்லி, அது சில ஏடு களிலே வெளிவந்துள்ளது.
கருணாநிதியைப் பற்றி, ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி சுப்ரமணியசாமி அநாகரீகமாக விமர்சித்திருக்கிறார். நீதிமன்றத்தில் இவர் எதை வேண்டுமென்றாலும் பேசட்டும், அதைப்பற்றி நாம் கருத்து கூற விரும்பவில்லை. ஏன் என்றால் நீதிமன்றத்தில் சொன்னதற்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்பது நமக்கும் தெரியும்.
ஆனால் நீதிமன்றத்தில் சொன்ன அதே கருத்தை இவர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதை பற்றிதான் வழக்கறிஞர் ராமன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எனவே அந்த நோட்டீசுக்கு இவர் பதில் கூற முன் வரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment